Wednesday 26 February 2014

வாட்ஸ்அப் போய் ''டெலிகிராம்'' இலவச ஆப்ஸ் வந்தாச்சுங்க..!



வாட்ஸப் ஒரு பெரிய கலக்கு கலக்கி இப்ப அதை பீட் பண்ணுது டெலிகிராம். இது என்ன புதுசுனு கேக்குறவங்களுக்கு காட்டு தீ போல கடந்த ஒரு வாரமா டவுன்லோட் குமியுது இந்த ஆப்ஸ்க்கு.

 இது வாட்ஸ் அப்பை விட வித்தியாசமானது. கிளவுட் பேஸ் – அப்படின்னா சென்னையில் ஒரு டெலிகிராம் யூஸர் சென்னையில உள்ள இன்னொருத்தருக்கு அனுபிச்சா வாட்ஸ்ப் மாதிரி சென்ட்டரலைஸ்ட் சர்வருக்கு போகாது.

 சில சமயம் ஆட்ஸ் அப்பில் சங்கு சக்கரம் மாதிரி சுத்திகிட்டே இருக்கும்ல அது கிடையாது இங்க டக்குனு லோக்கலா டெலிவிரி ஆயிடும். 100% இலவசம் வாழ் நாள் முழுவதும்.

அது போக சீக்ரெட் மெசேஜ் அனுப்பலாம் வேணும்கிறவங்களுக்கு. நீங்க ஒருத்தருக்கு பர்ஸனலா மெசேஜ் அனுப்புனும்னா என்கிரிப்பட்டட் முறையில் அனுப்பலாம்.அதை வேறு யாரும் பார்க்க முடியாது.

அது போக நீங்க அவங்களுக்கு அனுப்பின மெசேஜை இங்கிட்டு இருந்தே அழிக்கலாம். இன்னும் பல விஷயம் இருக்குனு சொல்றாங்க

முக்கியமா இது ஜெர்மனி கம்பெனி அதனால் அமெரிக்க வளர்ச்சி வெறுப்பாளர்களுக்கு ஒரு மாற்றாக அமையும் இதில் இன்னும பல விஷயங்கள் இருக்கு நீங்களே டெஸ்ட் பண்ணுங்க – ஆப்பிள் / ஆன்ட்ராயிட் வின்டோஸ் வெர்ஷன் இருக்கும்.

 இதில் முக்கியமான விஷயம் ஃபொன் பேட்டரி போனா கூட PC / Tablet மெசேஜ் அனுப்ப பெற முடியும்ங்கோ.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா