Wednesday 26 February 2014

2015-ல் இந்தியாவில் நுழையும் அமெரிக்க பைக் பிராண்டு..! அதிர்ச்சியில் இந்தியா..?



இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த யுஎம் குளோபல் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளை தொடர்ந்து யுஎம் குளோபல் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நுழைய இருக்கிறது. அந்த நிறுவனத்தின் திட்டங்கள், வரும் பைக் மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரெனிகேட் வரிசையில் 4 புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த யுஎம் குளோபல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த பைக் மாடல்கள் 124சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 200சிசி முதல் 250சிசி எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியாவிலேயே 50 சதவீதம் அளவுக்கு உதிரிபாகங்களை பெற்று பைக்குகளை அசெம்பிள் செய்ய யுஎம் குளோபல் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சவாலான விலையில் பைக்குகளை அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் கூட்டணி அமைத்து வர்த்தகத்தில் ஈடுபட யுஎம் குளோபல் திட்டமிட்டுள்ளது. விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகள் கூட்டணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

137.8சிசி, 180.4சிசி, 196.4சிசி ஆகிய மாடல்களில் அமெரிக்காவில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது

ரெனிகேட் ட்யூட்டி என்ற இந்த மாடலில் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக் 10.79 எச்பி திறன் கொண்டது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஸ்டைலிலான க்ரூஸர் பைக் மாடல் இது. இதில், 175சிசி அல்லது 196சிசி எஞ்சினுடன் வரலாம்.

ராணுவ மோட்டார்சைக்கிள் டிசைன் தத்துவம் கொண்ட இந்த பைக்கில் 223சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 18 எச்பி ஆற்றல் கொண்டது.

இந்த ஆண்டு மத்தியிலிருந்து இந்தியாவில் பைக் உற்பத்தியை துவங்கிவிடுவதற்கு யுஎம் குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளு. ரூ.75,000 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் தனது பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா