Monday, 3 February 2014
190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம்..!
பழமை வாய்ந்த விஸ்கி பாட்டில் ஒன்று ரூ.4 கோடிக்கு ஏலம் போனது.இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனி நபர் ஏலம் எடுத்தார்.அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஏலத்துக்கு வந்தது. இது 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது.இது ‘தி மக்காலன்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.
இறுதியில் அந்த பாட்டில் சுமார் ரூ.4 கோடிக்கு (6,28,205 டாலர்) ஏலம் போனது. இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனிநபர் ஏலம் எடுத்தார்.அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கு முன்பு ஒரு மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது.அதை நியூயார்க்கை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்திருந்தார். அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது இப்பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம் போனதை தொடர்ந்து முந்தைய சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment