Sunday 2 February 2014

பட்டதாரிகளில் 34% மட்டுமே தகுதியானவர்கள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு..!

பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணிக்கு தகுதியானவர்கள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு..!


பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணியில் அமர்த்த தகுதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் மாணவ–மாணவியரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்கள் அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்லைன் மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாணவ–மாணவிகளிடம் கணித–ஆங்கில அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் இணையதள அறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அவர்களுடைய பணியில் அமரும் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திர பிரதேசம், அரியானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பட்டதாரிகள் வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.


ராஜஸ்தான், ஆந்திரா, அரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் கல்வியைப் பொறுத்தவரை அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றாக உள்ளது

No comments:

Post a Comment

 
நண்பேன்டா