பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட என்ன செய்து கொடுப்பது என்ற பொறுப்பு தாய்மார்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை, பொறுப்பை சரிவர செய்யாத பெற்றோருக்கு பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறையை அமல்படுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு, அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும்; சிப்ஸ், இனிப்பு வகைகள், சாக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த விதிமுறையை தொடர்ந்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் ரிலோ என்னும் ஆறு வயது மாணவன் தினமும் தனது மதிய உணவாக சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்தான். இதையடுத்து, அந்த மாணவனை, நான்கு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்பாலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.இப்படி காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.அதிலும் இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.
அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதற்கிடையில் நாம் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் உணவை, நம் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று நம்மால் உறுதிபடுத்த முடியுமா? குழந்தைகள் சாப்பிடுவது எல்லாம் சத்தான உணவுதானா?அதிலும் நாம் கொடுத்தனுப்பும் தவறான உணவுப் பழக்கத்தினால், குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் விளையவிருக்கும் கேடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?அதிலும் இன்றைய மாணவர்கள்தான், நாளைய சமுதாயம்.எனவே இம் மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளரச் செய்வதற்கும், நொறுக்குத் தீனியின் (ஸ்நாக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) தீமைகளை அறியச் செய்வதற்கும், நன்மை அல்லது தீமை தரும் உணவுகளைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கும், பாதுகாப்பான உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை உலகமெங்கும் வலியுறுத்தி வரும் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் கூட சிட்னி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் தெரேஸா டேவி தலைமையிலான குழு,சென்னையிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவை வைத்து ஆய்வை மேற்கொண்டபோது தெரிந்த விஷயங்களை மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது:;
மொத்தம் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் 55.7% பேர் பெண்கள். இவர்கள் கொண்டு வந்த மொத்த உணவு வகைகள் 2,941. இவற்றில் 8% மட்டுமே மாமிச உணவு வகையைச் சேர்ந்தவை. பெரும்பான்மையானோர் புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் என தென்னிந்திய அரிசி உணவு வகைகளையே கொண்டு வந்தனர். சில மாணவர்கள் வறுவல், பீட்ஸா உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளையும் மதிய உணவாக கொண்டு வந்தனர். சில குழந்தை கள், கோலா உள்ளிட்ட பானங்களையும் குடிக்கக் கொண்டு வந்திருந்தனர்.
மொத்த மாணவர்களில் 87.7% பேர் வீட்டில் அம்மா செய்து கொடுத்த உணவையும், 7.3% பேர் பாட்டி உள்ளிட்ட மற்றவர்கள் செய்து கொடுத்த உணவையும், மீதமுள்ள 5% குழந்தைகள் ஹோட்டல் உள்ளிட்ட வெளிப்புற உணவையும் கொண்டு வந்திருந்தனர். இதில் வேதனையான ஒரு விஷயம், சில குழந்தைகள் பிரபல சிக்கன் உணவகத்தின் உணவுகளையும், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பான வகைகளையும் கொண்டு வந் திருந்தனர். சத்துமிகுந்த பழங்கள், காய்கறி களை, கைவிட்டு எண்ணக்கூடிய குழந்தைகளே எடுத்துவந்தார்கள்.
84.3% குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த உணவை விரும்பிச் சாப்பிட்டார்கள். மீதமுள்ள குழந்தைகள் வேண்டா வெறுப்போடு சாப்பிட்டார்கள். சில குழந்தைகள் மதிய உணவைச் சாப்பிடவே விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்… அதிக சதவிகித குழந்தைகள், சத்தான உணவுகளைக் கொண்டு வராததோடு, கொண்டு வரும் உணவையும் பிளாஸ்டிக் போன்ற ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களில்தான் எடுத்து வந்தார்கள்” என்றவர், ‘லஞ்ச் பாக்ஸ்’ விஷயத்தில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.
நூடுல்ஸ்… பர்கர்!
பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டுவரும் உணவுகள், பெற்றோர்களின் விருப்பப்படியே அமைகிறது. அதிகமான பெற்றோர்… காலை நேர பரபரப்பில் கட மையே என்று ஏதாவது ஒரு உணவைத் தயா ரித்து கொடுத்து அனுப்புபவர்களாகவும், அது சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பெரும்பாலான பள்ளிகள், குழந்தைகளின் மதிய உணவு விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.
இதனால் குழந்தைகளின் உணவுப் பழக்கத்துக்கு வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலுமே ஒரு கடிவாளம் இல்லை. இதனால் சில குழந்தைகள் பர்கர், பீட்ஸா, நூடுல்ஸ், கோலா என்று அதிக ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதுடன், அதையே மதிய உணவாக பள்ளிக்கும் எடுத்து வருகிறார்கள்.
இப்படி பாதிப்புகளை விளைவிக்கக்கூடிய நொறுக்குத்தீனி வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், உடல் பருமன் உண்டாக்கக் கூடிய உணவுகளையும், ஊட்டச்சத்து இல் லாத உணவுகளையும், உடல் நலத்தை கெடுக் கக்கூடிய உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர்’அத்துடன் குழந்தைகள் அருந்தும் பானங்களில் உள்ள சிலவகை அமிலங்கள், பல்லைக்கூட கரைக்கும் தன்மை கொண்டவை.
மேலும் குழந்தைகளின் ஆதரவைப் பெற, இதுபோன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எக்கச்சக்கமான விளம்பரங்களைச் செய்கின்றன..கூடவே இலவச பொருட்களையும் அள்ளித் தருகின்றன. அதனால் குழந்தைகள் விரும்பிக் கேட்க, பெற்றோரும் மறுக்காமல் வாங்கித் தருகிறார்கள்.
அது மட்டுமின்றி இப்போது இந்தியாவில் ஆண்டுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நொறுக்குத்தீனி மட்டுமே விற்பனை ஆகிறதாம். இதை அதிகமாக குழந்தைகள்தான் உட்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிக்கிறது. விளைவு எதுவரை செல்கிறது என்றால், புகைப்பிடித்தலுக்கு அடுத்தபடியாக இந்த உடல் பருமன்தான் இறப்புக்குக் காரணமாக அமைகிறதாம்.
‘கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளிடம் உடல் பருமன் மும் மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே இதய நோய்க்கான மிகமுக்கியக் காரணியாக இருக்கிறது’ என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘நொறுக்குத் தீனிகள் மிக விரைவில் உடலில் உள்ள ஈரலையும் பாதிப்படையச் செய்கின்றன’ இதனிடையேதான் பிரிட்டன் பள்ளிகள் லஞ்ச் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து கொள்கிறது. அது போல இங்கேயும் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வது நம் கையிதான் உள்ளது,
No comments:
Post a Comment