Monday, 3 March 2014

பரீட்சை ( தேர்வு ) பயத்தை போக்கும் எளிய வழிகள்..!



தேர்வுகள் நெருங்கிவிட்டன. எப்படி எழுதப்போகிறோம், எவ்வளவு மதிப்பெண் பெறப்போகிறோம் என்ற கவலை மாணவர்களுக்கு! அதைவிட கூடுதல் கவலை பெற்றோர்களுக்கு! நம் பிள்ளை எப்படி தேர்வை சந்திக்க போகிறான் என்றும், எவ்வளவு மதிப்பெண் பெற்று எங்கு மேற்படிப்பிற்கு செல்ல போகிறான் என்றும் நினைத்து கவலைகொள்ளத் தொடங்கிவிட்டனர்.

பள்ளியில் ஆசிரியரிடம் பாடங்களை தடையின்றி ஒப்பிக்கும் மாணவன், வகுப்பில் புத்திசாலி எனப் பெயர் பெற்ற மாணவன் ஆண்டுத்தேர்வில் தோல்வியடைகிறான் அல்லது எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் கவலையடைகிறான். பரீட்சையின் போது எல்லாமே மறந்ததாய் உணர்கிறான், இது எதனால்?

பாடங்கள் தெரிந்திருந்தும் சரியாக எழுத முடியாதது ஏன்? அதுதான் பரீட்சை பயம். மாணவமாணவிகளுக்கு மனநலம் மற்றும் மேல் படிப்பிற்கான கல்வி ஆலோசனை வழங்கும் சென்னை உளவியல் நிபுணர் டாக்டர் எம்.விமல தாரணி, பரீட்சை பயத்தை எப்படி போக்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார்.

பயத்திற்கான காரணங்கள்:

பரீட்சையின்போது பயம் ஏற்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஒருவருக்கு தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற கவலை, மற்றவருக்கு பெற்றோரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விடுவோமோ என்ற பதற்றம், ஒருசிலருக்கு தெரியாத கேள்வி வந்து விடுமோ என்ற குழப்பம், இன்னும் சிலருக்கு அதிக மதிப்பெண்ணோ அல்லது முழு மதிப்பெண்களோ பெற்று விட வேண்டுமே என்ற தவிப்பு. பயப்படுவதற்கான காரணம் இப்படி பலவாக இருந்தாலும், இந்த பயத்தின் பாதிப்பு என்னவோ ஒன்றுதான்.

பயத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:

பரீட்சை பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன் பலவிதமான உடலியல் மாற்றங்கள் அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் ஏற்படுகிறது. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவதுபோன்ற அறிகுறிகள் இதனால் உடலில் தோன்றும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச் சுழலும் அதிகரித்துவிடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.

பரீட்சையின்போது ஏற்படும் மறதி:

நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும்போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் (ப்ரீக்வென்சி) தான் இயங்கிக்கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும் கேட்கும் பாடங்கள் சற்றே குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.

குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள் எல்லாம் அதிகரித்த கொஞ்சமாக பரிச்சயமாகி பழகிய விஷயமாகிவிடும். அலைச்சுழலில் மனம் இருப்பதால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தைபோக்குவது எப்படி?

திட்டமிட்டு படிக்கும் முறை :

திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்கான வழி. ஒவ்வொரு பாடத்திலும் (சப்ஜெக்ட்) உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக்கொள்ள வேண்டும்.

மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கையே. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும்போது டி.வி பார்ப்பதை போலவோ, பாட்டு கேட்பதைபோலவோ வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்கு தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போதுதான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்..

பாடங்களை நினைவு கூறும் வழி :

நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலில் போகும் பாதை எல்லாம் புதிதாக இருக்கும். அதே பாதையில் அடிக்கடி போகத்துவங்கினால் வழியில் உள்ள எல்லாக் காட்சிகளும், கட்டிடங்களும் கொஞ்சம் தேர்வு நேரத்தில் நடந்துகொள்ளும் முறை:

நமக்கு தெரியாத ஒருவரை நாம் சந்திக்க வேண்டியிருந்தாலோ தெரியாத வேலையை செய்ய வேண்டியிருந்தாலோ சற்றே பயமும் பதற்றமும் இருக்கத் தான் செய்யும். அதே நேரத்தில் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவரை சந்திக்க வேண்டியோ, பழகிய வேலையை செய்ய வேண்டியோ இருந்தால் சுலபமாகவும், சாதாரணமாகவும் இருக்கும் அல்லவா?

அதுபோல்தான் தேர்வை நமக்கு பழகியதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். முழு தேர்வையும் அடிக்கடி (3 மணிநேரம்) எழுதி பழகிக்கொள்ள வேண்டும். இதையேதான் நாளையும் செய்யப்போகிறோம் எனும்போது தேர்விற்கு முந்தைய நாள் பயம் தோன்றாது. தேர்விற்கு முன்தினம் கட்டாயம் போதுமான தூக்கம் இருக்க வேண்டும்.

தேர்வு எழுதி முடித்த பின்பு எழுதிய தேர்வைப் பற்றி அதிகம் ஆராய்ந்து கொண்டோ பேசிக்கொண்டோ இருக்கக்கூடாது. தடைதாண்டும் போட்டி நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு தடையை தாண்டிய பிறகு அடுத்த தடையை நோக்கிதான் அவ் வீரர் ஓடுவார்.

ஒரு தடையை சரியாக டாக்டர் தாண்டவில்லை என்றாலும் அவர் கவனம் முழுவதும் இன்னும் சிறப்பாக அடுத்த தடையை தாண்டுவதில்தான் இருக்கும். எல்லாத் தடைகளையும் தாண்டிய பிறகே தன் வேகம், நேரம் போன்றவற்றை அறிந்து கொள்வார்.

அதுபோல்தான் மாணவர்களின் கவனமும் ஒரு தேர்வை முடித்த பின்பு அடுத்த தேர்வை நோக்கியே செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு தேர்வில் ஏதா வது தவறு செய்திருந்தாலோ, அதை மற்றவர்கள் குறிப்பிட்டு காட்டினாலோ மனம் தளர்ந்துவிடும். வி சீ ரி பயம் மற்றும் பதற்றமும் வந்து, அடுத்த பரீட்சையை அது பாதித்துவிடலாம்.

நேர்மறை அழுத்தம்:

மன அழுத்தத்தில் இரண்டு வகையுண்டு. ஒன்று நேர்மறை அழுத்தம். மற்றொன்று எதிர்மறை அழுத்தம். எந்த செயலையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு உத்வேகம் தர சிறிதளவு அழுத்தம் ( பாசிட்டிவ் ஸ்ட்ரெஸ் ) வேண்டும். இந்த அழுத்தம் எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். இந்த ஸ்ட் ரெஸ் பரீட்சையை சிறப்பாக எழுதவே உதவும்.

போருக்கு செல்லும் வீரனுக்கு முதல் தேவை வீரம். பின்பு பலமான ஆயுதம், மற்றும் ஆபத்தில் பாது காக்கும் கவசங்கள். அதுபோலத்தான் தேர்விற்கு செல்லும் மாணவர்களுக்கு முதல் தேவை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை (வீரம்).

பின்பு சிறப்பாக பாடங்களை படித்திருப்பது (ஆயு தம்) மற்றும் மேற்கூறிய குறிப்புகளை கடைபிடிப்பது (பாதுகாப்பு கவசங்கள்). இவையெல்லாம் இருக்க போரைப்பற்றிய பயம் எதற்கு? களமிறங்கி வெற்றி வாகை சூடவேண்டியதுதான்!

No comments:

Post a Comment

 
நண்பேன்டா