இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.
இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை.
பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது. இதே போல மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது.
இதனை ஸ்கைப் பதிப்பு 6 எனப் பெயரிட்டுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன் கேலரிக்கு இத்துடன், ஸ்கைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் லைவ் மெசஞ்சர், ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம் ஆகிய தளங்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பவும் இயலும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்,
சென்ற ஆண்டில் 850 கோடி டாலர் கொடுத்து, ஸ்கைப் நிறுவனத்தினை வாங்கியது. அப்போது, தன் சாப்ட்வேர் தொகுப்புகளுடன், ஸ்கைப் புரோகிராமினை இணைந்து இயக்கும் வகையில் மாற்றி மேம்படுத்தப் போவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில், தற்போதையே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதே நிகழ்வில், விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கான ஸ்கைப் பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இயக்க முறைகளின் படியே, ஸ்கைப் தொகுப்பும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 போல, மேலும் ஆறு மொழிகளில் கூடுதலான இயக்கத்தினையும் ஸ்கைப் தற்போது கொண்டுள்ளது.
மேக் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை,ஸ்கைப் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் சேட் செய்திடும் வசதியினைத் தந்துள்ளது. மேலும் ஆப்பிள் தரும் ரெடினா டிஸ்பிளேயினையும் ஸ்கைப் சப்போர்ட் செய்கிறது.
No comments:
Post a Comment