Saturday 8 February 2014

பேச்சுலர்களுக்கான சில சுவையான மற்றும் ஈஸியான சைடு டிஷ் ரெசிபி..!



தற்போது பேச்சுலர்கள் அதிகம் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்குவதை தவிர்த்து, வீடு எடுத்து தங்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு காரணம் விடுதிகளில் உணவுகள் சரியில்லாததும், பணப்பற்றாகுறையும் தான். ஏனெனில் வீடு எடுத்து தங்கினால் நாமே வீட்டில் நன்கு ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம் என்பது தான்.

ஆனால் அனைத்து பேச்சுலர்களுக்குமே நன்கு சமைக்க தெரியாது. அவர்கள் அனைவரும் புத்தகம் வைத்தும், நெட்டில் கொடுத்துள்ள ரெசிபிக்களை படித்தும் சமைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் அவர்களுக்கு வித்தியாசமான சில ரெசிபிக்களை சமைத்து சாப்பிட ஆசையிருக்கும். அப்படி இருக்கையில் எந்த ரெசிபியை செய்யலாம் என்ற குழப்பமும் இருக்கும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, பேச்சுலர்களுக்காக மிகவும் சுவையான மற்றும் ஈஸியான சில சைடு டிஷ் ரெசிபிக்களை கொடுத்துள்ளது. அவை அனைத்தும் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த சைடு டிஷ் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

 பன்னீர் டிக்கா மசாலா

 பன்னீர் டிக்கா மசாலா செய்வது கடினம் என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் ஈஸியானது மற்றும் பேச்சுலர்கள் எளிதாக சமைக்கக்கூடியவாறு இருக்கும்.

காரமான... பன்னீர் டிக்கா மசாலா

பன்னீர் ரொம்ப பிடிக்குமா? பன்னீரை கொண்டு வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ள பன்னீர் டிக்கா மசாலாவை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

பேச்சுலர்கள் கூட ட்ரை செய்து பார்க்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:


  •  பன்னீர் - 250 
  • கிராம் தயிர் - 1 
  • கப் வெங்காயம் - 2 (நறுக்கியது)
  • தக்காளி - 2 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 
  • டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2
  • (நறுக்கியது) முந்திரி பேஸ்ட் - 2
  • டேபிள் ஸ்பூன் டிக்கா மசாலா - 1
  • டேபிள் ஸ்பூன் சாட் மசாலா - 1 
  • டீஸ்பூன் சன்னா மசாலா - 1 
  • டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு


செய்முறை: 

முதலில் பன்னீரை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மசியுமாறு வதக்க வேண்டும்.

 பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் டிக்கா மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறி, அதனைத் தொடர்ந்து சாட் மசாலா மற்றும் சன்னா மசாலா சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும். பின் தயிரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

 அடுத்து நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு வேக வைத்து, இறுதியில் முந்திரி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிறிது நேரம் (பச்சை வாசனை போகும் வரை) வேக வைத்து இறக்கினால், நல்ல காரமான பன்னீர் டிக்கா மசாலா ரெடி..!

No comments:

Post a Comment

 
நண்பேன்டா