Saturday 8 February 2014

கேழ்வரகு கோதுமை ரவை இட்லி...




கேழ்வரகு சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடும், வாய் துர்நாற்றம் எடுக்காமலும் இருக்கும். ஆகவே தான் அக்காலத்தில் எல்லாம் மக்கள் காலை வேளையில் கேழ்வரகை கஞ்சி போன்று கரைத்து சாப்பிடுவார்கள்.

ஆனால் தற்போது கேழ்வரகு சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம், கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாதது தான் மேலும் கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், இதனை இட்லிகளாக ஊற்றி சாப்பிடலாம்.

இங்கு கேழ்வரகை கோதுமை ரவையுடன் சேர்த்து எப்படி இட்லி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

  தேவையான பொருட்கள்:

 கேழ்வரகு மாவு - 1 கப்

கோதுமை ரவை - 1 கப்

 கெட்டியான தயிர் - 3 கப்

 கேரட் - 1 கப் (துருவியது)

கடுகு - 1/2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

 முந்திரி - சிறிது

வேர்க்கடலை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை ரவை, துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் தயிர் ஊற்றி, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து தாளித்து, கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை, இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ரெடி!!!

குறிப்பு: வேண்டுமானால், இத்துடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா