Saturday 8 February 2014

”மாருதி-800 -க்கு குட் பை சொல்லுங்க’..!



இந்தியாவில் தனியார் வாகன சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து அதிகம் விற்கும் கார் என்ற பெயரை தக்க வைத்திருக்கும் மாருதி 800 கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10,ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே.மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே.குறைந்த அளவே காசு இருந்தால் போதும்.கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்றால் மிகையில்லை என்பது குறிப்பிடத்தக்க்து.

.கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் முன்னிலை வகித்த மாருதி 800 கார் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களிலிருந்து அண்மையில் விடைபெற்றது. மாருதி சுசூகி நிறுவனம் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்தது. இந்த கார் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போது பிரபலமாக இருந்த பிரிமியர் பத்மினி மற்றும் அம்பாசிடர் கார்களை பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது.

கார்களிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்கப்பட்டதால், நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கியது.சிறிய வகை கார்களை உற்பத்தி செய்யும் விதமாக ஜப்பான் நாட்டை சோ்ந்த சுசூகி நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் அதன் விலை50 ஆயிரமாக நிர்ணயி்க்கப்பட்டது. தற்போது இதன்விலை ரூ.2.35 லட்சமாகும் எத்தனை சிறியவகை கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இந்த மாருதி800 வகை கார்களை விரும்பியவர்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பாரத் 4 என்ற வாகன புகை கட்டுப்பாட்டு விதிகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே, அகமதாபாத், சூரத், கான்பூர், ஆக்ரா, ஐதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் 13 நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, மாருதி 800 கார் இன்ஜினை மேம்படுத்தினால் மட்டுமே மேற்கொண்டு விற்க முடியும்.ஆனால், இன்ஜினை மேம்படுத்தப் போவதில்லை என மாருதி அறிவித்துள்ளது. இதனால் புகை விதி நடைமுறைக்கு வந்துள்ள 13 நகரங்களில் மட்டும் மாருதி 800 கார் விற்பனையை உடனடியாக நிறுத்தியுள்ளது. எனினும், பிற நகரங்களில் தற்போது விற்பனை செய்யப்படும். படிப்படியாக இந்த மாடலின் உற்பத்தியை நிறுத்தவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன்,” நாட்டின் ஐதராபாத் பெங்களூரு, கான்பூர்,புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின்மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கச்செய்யவும் விற்பனையை அதி்கரிக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை 800 வகை கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல்4சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா