Friday 7 February 2014

உணர்ச்சியுள்ள செயற்கைக் கைகள்..! – விஞ்ஞானிகள் சாதனை..!



இன்றைய காலக் கட்டத்தில் அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். மற்றும் சில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இது போல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.இந்நிலையில் செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது.

 ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை கைக்கு உணர்ச்சி அளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அசத்தியுள்ளனர்.

தொடுதல் உணர்வை செயற்கை கைகள் உணரும் வகையிலான கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அறிவியல் இதழ் ஒன்றில்தான் இப்படி இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை கைக்கு உணர்ச்சி அளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நவீன செயற்கை கைகளில் பொருத்தப்படும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட் ரோடுகள், துண்டிக்கப்பட்ட கைகளின் முனையில் இருக்கும் நரம்புகளுடன் இணைக்கப்பட்டு உணர்ச்சிகளை உணரச் செய்கின்றன.இந்த செயற்கை உணர்ச்சிக் கருவி பொருத்தப்பட்ட கைகளின் மூலம், ஒரு பொருளை எடுக்கும்போது, அது மென்மையாக இருக்கிறதா, கடினமானதாக இருக்கிறதா என்பதை உணர முடியுமாம். இனி விபத்து உள்ளிட்டவைகளில் கைகால்களை இழந்தவர்களுக்கு வரப் பிரசாதமாக இந்த புதிய கண்டு பிடிப்பு அமைந்துள்ளது.

இன்னமும் ஆய்வு நிலையில் இருக்கும் இந்த செயற்கை கை தொடர்பான கண்டுபிடிப்பு, பரவலான பயன்பாட்டுக்கு வர இன்னும் சிறிது காலமாகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஒன்றில் தனது கையை இழந்த டென்மார்க்கைச் சேர்ந்த டென்னிஸ் அபோ சோரென்சென் என்பவருக்கு இந்த செயற்கை கையை விஞ்ஞானிகள் பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்க்கது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா