பொதுவாக பிப்ரவரி மாதம் காதலர்களுக்கான மாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் உலக காதலர் தினமானது கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலர்களுக்கு பிப்ரவரி 14 ஆம் நாள் மட்டும் காதலர் தினமல்ல. அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான். இருப்பினும் பிப்ரவரி மாதம் காதலர்களுக்கு இன்னும் சிறப்பான மாதமாக இருக்கும்.
அதிலும் இன்னும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள், அதுவும் வெள்ளிக்கிழமை. ஆகவே காதலர் தினத்தின் போது மட்டும் துணையை அசத்த நினைக்காமல், ஒவ்வொரு வாரமும் வரும் வெள்ளிக்கிழமை அன்று துணையுடன் சேர்ந்து நேரத்தை செலவழித்து, அவர்களை மகிழ்வித்து வாருங்கள். அதிலும் இந்த நாளில், உங்கள் ரொமான்டிக் நிகழ்வுகளை மீண்டும் உருவாக்கி, உங்கள் வீட்டில் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்.
அதற்கு நெருக்கமான நிகழ்வுகளை வீட்டில் மீண்டும் உருவாக்கி, இந்த வெள்ளிக்கிழமையை குதூகலத்துடன் கொண்டாடுங்கள்.
படுக்கை
படுக்கை மற்றும் தலையணையின் வண்ணங்களை சிவப்பு நிறத்தில் மாற்றி அமைக்கலாம். ஏனெனில் சிவப்பு நிறமானது காதல் உணர்வை தூண்டிவிடும்.
மெழுகுவர்த்தியுடன் கவர்ச்சியை அதிகரியுங்கள்
மெழுகுவர்த்திகள் என்பது எப்போதுமே அதிமுக்கிய ரொமான்டிக் பொருளாகும். அது உங்கள் அறைக்கு வெப்ப உணர்வை உண்டாக்கும். கிளர்வுணர்வுக்கு சிவப்பு மெழுவர்த்திகள், ரொமான்சிற்கு பிங்க் மெழுகுவர்த்திகள் மற்றும் சொகுசுக்கு வெள்ளை மெழுகுவர்த்திகள். உங்கள் எது தேவையோ அதனை வாங்கி, உங்கள் இரவை சந்தோஷமாக்கிடுங்கள்.
ஒன்றாக சமைத்து சாப்பிடுங்கள்
வெள்ளிக்கிழமை முடிந்து வீட்டிற்கு போனதும், துணையுடன் சேர்ந்து சமைத்து மாலை நேரத்தை கழித்திடுங்கள். இதனால் அவர்களுடன் நேரம் செலவிடுவதோடு மட்டுமல்லாமல், நிறைய பேசி ஒருவரை பற்றி மற்றவர் இன்னமும் அதிகமாக தெரிந்து கொள்வீர்கள்.
படுக்கையில் இரவு உணவு
உணவு பரிமாறும் தட்டு ஒன்றை வாங்கி, சுவையான எளிய இரவு உணவுகளை செய்து, இருவரும் படுக்கையிலேயே உண்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment