Sunday, 9 March 2014
விவாகரத்து மனுதாக்கல் செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை..!
1. மனநல ஆலோசகரையோ, குடும்ப நல ஆலோசகரையோ சந்தித்தால் தீர்வு கிடைக்குமா என்று யோசித்தல்.
2. முடிவில் விவாகரத்து அவசியமெனில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யலாம்.
3. வழக்குக்கான அடிப்படை தஸ்தாவேஜுகள் - அதாவது, திருமண பத்திரிகை, திருமண பதிவு சான்றிதழ், திருமணத்தின் போது எடுத்த புகைப்படம், கணவனும் மனைவியுமாக வாழ்ந்ததற்கான விலாச ஆதாரம், குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ், எதிர்தரப்பினர் செய்யும் தவறினை சுட்டிக்காட்டுவதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தயாராக உள்ளதா என்று கவனித்தல்.
4. கணவனுக்கோ, மனைவிக்கோ சேரக்கூடிய சொத்துகள், நகை மற்றும் தனிப்பட்ட பொருள்கள், அவருக்குச் சேர வேண்டிய தஸ்தாவேஜுகள், அவருக்குச் சேர வேண்டிய விலையுயர்ந்த ஆபரணங்கள் இருப்பின் அவற்றுக்கான பட்டியல் தயாரிப்பது அவசியம்.
5. விவாகரத்து வழக்கை கையாளும் நல்ல வழக்கறிஞரின் முகவரியை பெற்று அவரிடம் ஆலோசனை பெறுதல்.
- நம் நாட்டில் தன்னிச்சையாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் நிறைவாக மனமொத்த விவாகரத்து மனுவாக முடிவு பெறும் வாய்ப்புகள் அதிகம். ஒரு நல்ல தாம்பத்ய வாழ்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போவது, பரஸ்பர புரிதல், மரியாதை போன்றவை.
எந்த ஒரு தம்பதியும் சிறு சண்டை கூட இல்லாமல் தாம்பத்யம் நடத்துவது கனவிலும் நடைபெறாத ஒன்று. திருமண உறவில் சிறு சிறு பூசல்கள் வரும்போது அவற்றை பெரிய சண்டைகளாக மாற்றி நல்லறமாக இருக்கும் இல்லற வாழ்வை சீர்குலைக்காமல் இருப்பது நலம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லும் திருமணங்களை நரகங்களாக்கிக் கொண்டு நீதிமன்ற கதவுகளைத் தட்டுவது போன்ற பேதமை செயல் வேறொன்றும் இல்லை!
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment