Sunday 16 March 2014

800 கோடி முதலீட்டுடன் 400 திரையரங்குகளை அமைக்கும் சினிபோலிஸ்..!



டெல்லி: மெக்சிகோ நாட்டை சேர்ந்த திரையரங்கு நிறுவனமான சினிபோலிஸ் இந்தியாவில் தனது 84 திரைகளில் இருந்து 400 திரைகளாக உயர்த்த சுமார் 800 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் சமார் 13 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த முதலீட்டின் மூலம் 17,600 இருக்கைகளாக இருக்கும் எங்களது இந்திய வர்த்தகம் 88,000 இருக்கைகளாக உயரும் என சினிபோலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் "2017ஆம் ஆண்டிற்குள் சுமார் 400 திரையரங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு திரையறங்கும் 2.5 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.

தற்போது 84 திரையரங்கள் உள்ளன மிதமுள்ள 316 திரையரங்குகளை 2017ஆம் ஆண்டுக்குள் அமைக்க அனைத்து வேலைகளில் ஈடுப்பட்டுள்ளோம்"தெரிவித்தார்". என அவர் தெரிவித்தார்.

இந்த விரிவாக்க திட்டத்தில் சுமார் 180 திரையரங்கிகளை தென் இந்தியாவில் அமைக்கப்படும் எனவும், இதில் 70 திரைகளை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் அமைக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்தது.

இந்திய திரையரங்குகளில் சுமார் 40 சதவீதத்தை தன்னகத்தில் வைத்திருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் சுமார் 5.7 சதவீத இருக்கைகளை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா