Sunday 16 March 2014

அமெரிக்காவின் 4-வது ஜனாதிபதி ஜார்ஜ் மாடிசன் பிறந்த தினம் - மார்ச் 16- 1751



ஜார்ஜ் மாடிசன் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார்.

இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர்.

குறிப்பாக அமெரிக்காவின் 1787-ம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர்.

இதனால் இவரை 'அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை' என போற்றுவர்.

இவர் 1788-ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை.

 1787- 1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார்.

அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார்.

அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை உரிமைகள் சட்டத்தின் தந்தைஎனப் போற்றுவர்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா