Thursday 13 February 2014

தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை சரிவு..!



 நாட்டில் தரைவழி தொலைபேசி இணைப்பு உபயோகிப்பாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 89.98 கோடியாக சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 90.30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செல்போன் உபயோகத்துக்கு வந்த பிறகு தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் 4.03 சதவீத அளவுக்குக் குறைந்து வந்துள்ளது.

 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 93.77 கோடியாக இருந்தது. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ அடிப்படையிலான கம்பியில்லா தொலைபேசி உபயோகிக்கும் சந்தாதாரர் எண்ணிக்கை 87.05 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 80.21 கோடியாக இருந்தது.

ஏர்டெல் 19.33 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு முதலிடத்திலும் 15.55 கோடி வாடிக்கையாளர்களுடன் வோடபோன் நிறுவனம் இரண்டாமிடத்திலும், ஐடியா நிறுவனம் 12.72 கோடி வாடிக்கையாளர்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா