Thursday 13 February 2014

புகைபிடிக்கும் பள்ளி மாணவிகள் டெல்லியில் அதிகம்..! சர்வேயில் தகவல்



கடந்த 2012ம் ஆண்டில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 12.1 மில்லியனாக இருந்தது. இது 1980ம் ஆண்டில் 5.3 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில்மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தலைநகர் புதுடெல்லியில் புகை பிடிப்பவர்களின் மத்தியில் மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது மேலும் அப்செட்டை அளித்துள்ளது.

இன்றைய பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றும் புகை பழக்கத்திற்கு முக்கிய காரணம் என்ன கேட்ட போது மன அழுத்தத்தால் புகை பிடிப்பதாக பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தியதில் புகை பழக்கம் உள்ளவர்கள் 14 வய்து முதல் 18 வயதுக்குள் என்று தெரியவந்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 700 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது கணக்கெடுப்பில் 49 சதவீதம் புகையிலை பொருட்கள் வழக்கமாக ப்யன்படுத்துபவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.முன்னதாக இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்கள்தான் சேகரிக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை நகரில், கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது.இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க்து.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா