Tuesday, 18 March 2014
நயன்தாரா, அனுஷ்கா,காஜல் அகர்வால் - இவர்களைவிட சார்மி தி பெஸ்ட்..!
சார்மியை பார்த்து 30 பெண்கள் நடிக்க வந்ததாக ஐஸ் வைத்திருக்கிறார் டோலிவுட் இயக்குனர். ‘ஆஹா எத்தனை அழகு‘, ‘காதல் கிசு கிசு‘, ‘லாடம்‘ போன்ற படங்களில் நடித்தவர் சார்மி.
டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா, அனுஷ்கா, பிரியாமணி, காஜல் அகர்வால் போன்றவர்களின் போட்டி, புதுமுக நடிகைகளின் வரவு போன்றவற்றால் சார்மிக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
இந்தியில் பிரபு தேவா இயக்கிய ‘ஆர் ராஜ்குமார்‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தற்போது, ‘ரம்பா ஊர்வசி மேனகா‘ என்ற படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சார்மியின் உச்சி குளிரும் வண்ணம் டோலிவுட் இயக்குனர் ஸ்ரீதர் டி இணையதள பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.
அதில்,‘என் படத்தில் ஹீரோயினாக நடிக்க நேர்முக தேர்வு நடத்தினேன். 53 பெண்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 30 பேர் தங்களது ரோல் மாடல் என்று சார்மியை குறிப்பிட்டார்கள்.
‘அனுகோகுண்டா ஒக ரோஸு படத்தை குறிப்பிட்டு அந்த பாத்திரத்தில் வெளிப்படுத்தி இருந்த நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
இதை இணைய தளபக்கத்தில் பார்த்த சார்மி இயக்குனருக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், உங்களது தகவல் சந்தோஷத்தை அளித்திருக்கிறது என்று பதில் அளித்திருக்கிறார்....
Labels:
எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment