Saturday 8 March 2014

கருப்பை நார்த்திசுக் கட்டிகள் கருவுறுதலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா..?



பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் (Fibroids). பொதுவாக இந்த பிரச்சனை 30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்குத் தான் ஏற்படும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே கருப்பைப் சுவர்களில் கட்டிகளானது ஏற்படுகிறது. இதற்கு பெரும் காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இத்தகைய கட்டிகள் இருக்கும் போது கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியது தான். இப்போது இத்தகைய நார்த்திசுக்கட்டிகள் இருந்தால், கர்ப்பம் அடைய முடியுமா முடியாதா என்று பார்ப்போம்.

நார்த்திசுக்கட்டிகள் என்றால் என்ன?

நார்த்திசுக்கட்டிகள் என்பது கருப்பையின் சுவரில் வளரும் ஒரு சிறு கட்டிகள் ஆகும்.

எதற்கு நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் கர்ப்பம் தரிப்பது கஷ்டம்?

* நார்த்திசுக்கட்டிகள் இருந்தால் ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. இவ்வாறு முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது இருந்தால், ஓவுலேசன் காலத்தை கணக்கிடுவது என்பது கடினமான ஒன்றாகிவிடும். எனவே தான் நார்த்திசுக்கட்டிகள் இருந்தால், கருவுறுவது என்பது சவாலான ஒன்றாக உள்ளது.

* சில பெண்களுக்கு நார்த்திசுக்கட்டிகளினால், 6 மாதம் வரை கூட மாதவிடாய் சுழற்சியானது இல்லாமல் இருக்கும். இத்தகைய நிலை நார்த்திசுக்கட்டிகளானது பெரியதாக இருந்தால் தான் ஏற்படும். மேலும் இந்த பெரிய கட்டிகள், கருப்பையில் கருமுட்டை செல்வதை தடுத்துவிடும். ஆகவே தான் கஷ்டமான ஒன்றாக உள்ளது.

* நார்த்திசுக்கட்டிகள் இருந்தும், கருவுற்றால் கருமுட்டையின் வளர்ச்சிக்கு தடை ஏற்படும். அதாவது இந்த நிலையில் கருத்தரிப்பது, கருவின் வளர்ச்சியை பாதித்து, இறுதியில் 45 நாட்களுக்குள் கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

* அதுமட்டுமின்றி நார்த்திசுக்கட்டிகளுடன் கருவுறும் போது மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும். என்னவெனில் கர்ப்பத்தின் போது ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால், கட்டிகளின் வளர்ச்சியும் அதிகரித்து, சில சமயங்களில் கருச்சிதைவை ஏற்படுத்தும் அல்லது கருப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தி சிசேரியன் பிரசவத்திற்கு உள்ளாக்கும்.

நார்த்திசுக்கட்டிகளை சரிசெய்ய முடியுமா?

தொழில்நுட்பரீதியாக நார்த்திசுக்கட்டிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் கர்ப்பத்தின் போது ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களினால், கட்டிகளின் வளர்ச்சி அதிகரித்து, கருவின் வளர்ச்சிக்கு தடையை உண்டாக்கியே கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே நார்த்திசுக்கட்டிகள் இருந்தால், கருவுற முடியும். இருப்பினும், கட்டிகளை நீக்கிவிட்டு பின் கருவுற்றால் மிகவும் நல்லது

No comments:

Post a Comment

 
நண்பேன்டா