Friday 14 March 2014

கைகளை தட்டுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?



கைகளை தட்டினால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்லும் போது கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் அது நூற்று நூறு உண்மை என்று அறியும் போது அது ஒரு நல்ல விஷயமாக அமைகிறது. காலையில் இசையை கேட்பதை விட இரண்டு கைகளை தட்டும் போது எழும் ஓசையை கேட்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

பொதுவாக யாரையாவது உற்சாகப்படுத்த தான் நாம் கைகளை தட்டுவோம். அதே போல் நாம் சந்தோஷத்துடன் இருக்கும் போதும் கைகளை தட்டுவோம். பல பேர் பாட்டு பாடும் போது கைகளை தட்டுவார்கள். கைகளை தட்டுவதே ஒரு தனி குஷி தான். அதனால் தன் பல குழந்தைகளுக்கு கை தட்டுவதென்றால் கொள்ளை பிரியமாக இருக்கும்.

சரி, கைகளை தட்டுவதால் கிடைக்கும் உடல்நல பயன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கைகளை தட்டுவதால், இதய நோய்கள் மற்றும் ஆஸ்துமா சம்பந்த பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு கிடைக்கும்.

இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடன் நரம்புகள் இணைய இது பெரிதும் உதவும். கைகளை தட்டினால் நரம்புகள் சீராக செயல்படும்.

கைகளை தட்டினால் மன அமைதி கிட்டும்.

இது உங்கள் உடலில் உள்ள குருதி வெள்ளையணுக்களை திடப்படுத்துவதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் எவ்வகையான நோய்களில் இருந்தும் உங்கள் உடலை இது பாதுகாக்கும்.

குழந்தைகளின் ஆற்றல் திறனை அதிகரித்து அவர்களின் கல்வி சார்ந்த செயல் திறனை மேம்படுத்தும்.

கைகளை தட்டும் போது இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். அதனால் தமனி மற்றும் அசுத்த இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கும். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் நீங்குவதும் அடங்கும்.

குழந்தைகளுக்கு கைகளை தட்ட பயிற்சி அளித்தால், அவர்களின் இயக்க செயல் திறன்கள் மேம்படும். அதனால் அவர்களின் கையெழுத்து அழகாகும், சிறப்பாக எழுத வரும், எழுத்துப்பிழையும் குறையும்.

தினமும் உணவருந்திய பின் ஒரு மணி நேரத்திற்கு கைகளை தட்டுங்கள். அது வெப்பத்தை ஏற்படுத்தி கைகளிலும் கால்களிலும் வியர்க்க செய்யும்.

நல்ல பயனை பெற, கைகளை தட்டுவதற்கு முன், தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை உள்ளங்கையில் தடவிக் கொள்ளுங்கள். அதனால் அதனை உங்கள் உடல் உறிஞ்சி விடும்.

இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், ஆஸ்துமா, சளி, கீல்வாதம், தலைவலி, தூக்கமின்மை மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைகளை கைகளை தட்டுவதால் சரி செய்யலாம்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா