Tuesday, 11 March 2014
780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு..!
மைக்கல் சட்னர் என்னும் சவூத் ஆஃப்ரிக்காவை சார்ந்தவர் – ஒரு புது வகை விளக்கை கண்டுபிடித்துள்ளார் இதன் பெயர் லைட்டீ – இது சூரிய சக்தியில் தான் இயங்கும் ஆனால் இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த லைட்டீயை படத்தில் உள்ளது போல சொருகினால் லைட் தானாய் எரியும்.
பகல் நேரத்தில் அதுவே 5 மணி நேரம் சார்ஜ் ஆனால் 8 மணி நேரம் லைட் எரியும்.
இதற்க்கு சுவிட்ச் ஏதும் இல்லை. சூரிய ஒளி பட்டால் ஆடோமேட்டிக்காக சார்ஜும் இருட்டினால் ஆட்டோமேட்டிக்காக வெளிச்சமும் தரும் எல் ஈ டி வகை விளக்குகள்.
இதன் விலை வெறும் 780 ரூபாய்கள் மட்டும் இதை இன்னும் எளிமைபடுத்தினால் 500 ரூவாய்க்கு கீழேயும் கிடைக்குமாம்.
இதில் CIGS (Copper Indium Gallium Selenide) ஃபோட்டோ வோல்டிக்க்கும் உண்டு உள்ளே பேட்டரியும் இருக்கும் சிறு டெஸ்ட்டியுப் போன்ற வடிவமைப்பு.
எதற்க்கு தண்ணீர் நிரம்பிய கூல் டிரிங் பாட்டில் என்றால் அதிக வெளிச்சம் தரும் அதனால். இந்த பல்பின் லுமன்ஸ் 120 – 300 வரை.
இதன் வீடியோ – http://www.youtube.com/watch?v=vfDtZ9TWGNc
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment