Saturday 15 February 2014

உடலை FIT ஆக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!



பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள பாகங்களை நன்றாக அறிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை செய்து உணவையும் உட்கொள்ள வேண்டும். பருமனாக இருக்கும் இடத்தில் மட்டும் பயிற்சி செய்து குறைப்பது முறையன்று.
ஒருவர் பல உடற்பயிற்சிகளையும் செய்து முழு உடலையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். அவை கண்டிப்பான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உடற்பயிற்சி (Religious workout) ஆகும்.
பளு தூக்குதல் : உடலில் உள்ள தசைகளை விரிவுபடுத்த விரும்பினால் இந்த வகை பயிற்சியை மேற்கொள்ளலாம். சாதாரணமாக செய்யும் பயிற்சிகளை காட்டிலும் இது சிறிது மேலானதாகும். இந்த பயிற்சியை செய்வதற்கு பல்வேறு பயிற்சிகளும், உடல் பலமும் தேவைபடுகின்றது. ஆனால் பளு தூக்குவது உடலுக்கு சிறந்த வடிவத்தையும் கவாச்சியான அமைப்பையும் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதயத்தை வலுப்படுத்தும் பயிற்சி : இதயத்தை பலப்படுத்த சைக்கிளிங், தடகளம், திரெட் மில், ஸ்டெப்பிங் மற்றும் பல பயிற்சிகள் உள்ளன. இத்தகைய பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்தியையும், தாங்கும் உறுதியையும் கொடுக்கின்றன. பருமனான உடலை உடையவர்களுக்கு இத்தகைய பயிற்சி மிக உபயோகமாக இருக்கும். இதை சரிவரசெய்தால் உடல் நிச்சயம் குறையும்.
விளையாட்டு : பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் எடையை குறைக்க முடியும். இவ்வாறு உடலை வடிவுப்படுத்தவும் முடியும். இத்தகைய பயிற்சிக்கு அதிக சக்தி தேவை மற்றும் இப்பயிற்சி மூலம் அதிக கொழுப்பையும் குறைக்க முடியும்.
ஸ்ட்ரெட்சிங் : ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் அதாவது கைகள், கால்கள், இடுப்பு, ஆகிய பாகங்களை நீட்டி பயிற்சியை தொடர்ந்து செய்தால் எடை வெகுவாக குறையும். உடலை கட்டுக்குள் கொண்டு வர இப்பயிற்சி உதவுகிறது. உடலுக்கு நல்ல அமைப்பையும் தருகிறது. ஸ்ட்ரெட்சிங் செய்வதால், உடல் இறுக்கமடைந்து கவர்ச்சியான உடலை பெற முடியும்.
நீச்சல் : நீச்சல் வேறு எந்த பயிற்சியை காட்டிலும் இரு மடங்கு கலோரிகளை குறைக்க வல்லது. நீச்சல் பயிற்சி கால் மற்றும் கைகளை வலுவூட்டி உடலையும் குறைக்கிறது. ஆகையால் நீச்சலும் உடலை குறைப்பதற்கு ஒரு சிறந்த பயிற்சியாகும்.
ஸ்கிப்பிங் : 100 லிருந்து 200 ஸ்கிப்ஸ் ஒரு நாளைக்கு செய்வது உங்களை கவர்ச்சியாக வைக்க உதவும். உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் சீர்படுத்தி உடலை கச்சிதமாக வைக்க உதவுகிறது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா