Saturday 22 February 2014

ஆண்களை விட பெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகம்..!



நோய்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்கு தேவையான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாத இந்தியர்கள் எண்ணிக்கை 29 சதவீதம் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பரவாத நோய்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது உச்சி மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடக்கிறது. அதில் சமர்ப்பிப்பதற்காக இந்திய பொது சுகாதார அமைப்பு சார்பில் நாடு முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஆரோக்கியத்தின் மீது இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததை காட்டுகின்றன. அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 29 சதவீதத்தினர் உடற்பயிற்சி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை. ஈடுபடவும் இல்லை. சொல்லப் போனால் அவர்களிடம் அசைவே குறைவு.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் மேலும் மோசமான நிலையில் உள்ளனர். உடல் உழைப்பு இல்லாத பெண்கள் எண்ணிக்கை 34 சதவீதம். அதாவது, 3ல் ஒரு பெண்.

வாரத்தில் சராசரியாக 149 நிமிடங்கள் உடல் உழைப்பு அவசியம் என்ற அளவுகோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது. குழந்தை முதல் வயதானோர் வரை ஆண்களில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை 24 சதவீதம்.

அதாவது 4ல் ஒரு ஆணிடம் சாதாரண உடற்பயிற்சி என்பதே இல்லை. உடல் உழைப்பு இல்லாதவர்களில் கிராமவாசிகளைவிட நகரவாசிகள் நிலைமை மோசம். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் பாதிக்கும் மேற்பட்டோர் தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர் என்கிறது ஆய்வு அறிக்கை.

உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாததன் விளைவுகள்: நகரங்களில் 6.6 முதல் 12.7% இதய நோயால் பாதிக்கின்றனர்.

கிராமங்களில் 2.1 முதல் 4.3 சதவீதம் பேருக்கு இதய கோளாறுகள். இருதரப்பையும் சேர்த்து 3.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5.1 கோடி பேர் டயபடீஸ் நோயாளிகள். 2025ல் இது 8.7 கோடியாகும் அபாயம். இந்திய நோயாளிகளில் 8.5% பேர் மனநோய் பாதித்தவர்கள்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா