Wednesday 12 February 2014

இந்தியாவின் அடுத்த இலக்கு குழந்தைகளுக்கான முழு நோய் தடுப்பு முறைகள்..!



நாட்டில் போலியோ நோயே இல்லாமல் விரட்டியதற்கு பின், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் முழு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதே அடுத்த இலக்காக இருக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

போலியோவை வெற்றிகரமாக விரட்டியடித்ததையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பி.ஜே.பி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர்கள், உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன் பேசியதாவது:-

வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள். இதோடு நின்றுவிடாமல் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் காக்கும் மருந்தை வழங்க முயற்சிக்க வேண்டும். நாட்டின் கடைக்கோடியில் உள்ள அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு முழு நோய் தடுப்பு முறையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சோனியா பேசும்போது, ஒரு விதத்தில் நாம் இது குறித்து பெருமைப்பட வேண்டும். 20 வருடங்களுக்கு முன் 50000 பேர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது அந்நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா