Tuesday, 11 February 2014
பலாத்காரம் செய்து நர்ஸ் கொலை கைதான மாணவர் பகீர் வாக்குமூலம்...!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மருதுப்பட்டியை சேர்ந்த சின்னையா மகள் நந்தினி (21). சின்னையா இறந்து விட்டதால் நந்தினி தனது தாயுடன் வசித்து வந்தார். நர்சிங் பயிற்சி முடித்த நந்தினி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
வேலைக்கு சென்ற நந்தினி நேற்று முன்தினம் இரவு வெகுநேரமாகியும் நந்தினி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை மருதுப்பட்டியில் உள்ள ஒரு கரும்பு காட்டில் நந்தினி சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்டு, துப்பட்டாவின் இன்னொரு பகுதியால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது.
நந்தினி கடைசியாக மருதுபட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மகேந்திரனுடன் (20) சென்றது தெரிய வந்தது. போலீசார் மகேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் மகேந்திரன் கூறியதாவது:
நந்தினி எனக்கு அக்கா முறை வேண்டும். அவர் மீது எனக்கு ஆசை இருந்தது. தம்பி என்ற முறையால் அவர் என்னிடம் பேசுவார். அவரை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பைக்கில் இலுப்பூர் பஸ் நிறுத்தம் சென்றேன். அப்போது நந்தினி பஸ்சில் இருந்தார். நான் ஊருக்கு தான் போகிறேன். என்னுடன் வா என பைக்கில் அழைத்து சென்றேன்.
ஊருக்கு அருகில் வந்ததும் பைக்கை நானாக நிறுத்தினேன். பைக் ரிப்பேராகி விட்டது. நாம் நடந்தே செல்லலாம் என்று கூறினேன். இதை நம்பிய நந்தினியும் என்னுடன் நடந்து வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கரும்பு தோட்டம் அருகில் வந்த போது அவரை தோட்டத்துக்குள் தூக்கி சென்றேன்.
அவர் கூச்சல் போட்டார். வாயை பொத்தி கீழே தள்ளினேன். இதில் அவர் மயக்கமடைந்தார். பின்னர் அவரது கைகளை சுடிதார் துப்பட்டாவால் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்தேன்.இந்த விஷயத்தை ஊரில் வந்து சொல்லிவிடுவார் என பயந்து அதே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன்.
Labels:
செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த நிலை கெட்ட மனிதரை ....
ReplyDelete