Tuesday, 11 February 2014
நாளை முதல் 2 நாட்கள் மத்திய அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம்..!
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் நாளை முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளன.
அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள் பாதிக்கப்படும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, வருமானவரித்துறை, சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ, அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் நாளை தொடங்க உள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று முடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment