Monday 17 February 2014

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!



காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை.

காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது.

சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது.

இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.

சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன.

இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள்.

இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன.

 எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது

நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும்.

வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது.

ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.

ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்

நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது.

 வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம்.

வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்

சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

ஆகாயத்தில் அரங்கேறிய அத்துமீறல்....!



 கிண்டல், கேலி, உள்நோக்கத்துடன் உரசுதல், தகாத வார்த்தைகளால் உடல் அமைப்பை வர்ணனை செய்தல் என்று பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் ஆண்களின் கைவரிசை அலுவலகம், சாலை, பேருந்து போன்ற இடங்களைத் தொடர்ந்து ஆகாயத்திலும் அரங்கேறி வருகிறது.

சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் விமானப் பணிப்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு விமானத்துறை அமைச்சகம் சார்பாக அளிக்கப்பட்ட பதில் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸில் பணிபுரியும் விமானப் பணிப் பெண்கள் மீதுதான் அதிக அளவில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்தி வெளியானது.

பணிப் பெண்கள் மற்றும் விமானச் சேவைக் குழுவிலுள்ள பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 84 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனத்தில் 48 வழக்குகளும், இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் 19 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்முகமும் வன்முறையும்

விமானப் பணிப்பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் உள்ளிட்ட வன்முறைகள் உலகம் முழுவதும் சகஜமாக இருப்பது பல செய்திகள் மூலம் புலப்படுகிறது. பயணிகளை அவரவர் இடத்தில் வசதியாக உட்காரவைத்துவிட்டு அவர்களை உபசரித்துக் கவனித்து உதவுவதே ஒரு பணிப் பெண்ணிண் கடமை.

பயணத்தின்போது பயணிப்போருக்கு எந்தத் தேவை ஏற்பட்டாலும், சீட்டைச் சாய்த்து ஹாயாக உட்காரவைப்பது முதல் கழிப்பறைக்கு வழி சொல்வது வரை இன்முகத்துடன் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆண்கள் பலர் தங்கள் காமவெறியை இந்த அப்பாவிப் பணிப் பெண்கள் மீது பிரயோகிக்கின்றனர். இது போன்ற பெரும்பாலான சம்பவங்களில் முக்கியப் புள்ளிகளும், அரசியல்வாதிகளும், வயதில் மூத்தவர்களும் ஈடுபடுகிறார்கள்.

2010ஆம் ஆண்டு, கோவாவைச் சேர்ந்த மூன்று கால்பந்து வீரர்கள் மும்பை வழி விமானத்தில் பணிப் பெண் ஒருவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததை அடுத்து, மும்பை போலீசார் அம்மூவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

விமானப் பணிப் பெண்ணிடம் போதையில் அத்துமீறியதற்காகவும் விமானத்தில் புகைபிடித்து அவமானப்படுத்தியதற்காகவும் கனடாவைச் சேர்ந்த பிரபலப் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரை நியு ஜெர்ஸி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

2004ஆம் ஆண்டு, தாய் விமான நிறுவனப் பணிப் பெண்ணிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தவறாக நடந்துகொண்ட சம்பவத்தில் பிரிவு 354இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

பிரபலங்கள் மட்டுமல்ல, பைலட்டுகளும்கூட விமானப் பணிப் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு செய்து வழக்குகளில் சிக்கியுள்ளார்கள். 2010இல் தனியார் விமான நிறுவன பைலட் ஒருவர் தவறாக நடந்து கொண்டதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்படிப் பல வழக்குகள் அவ்வப்போது செய்தியாக வந்துகொண்டிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தவறு இழைத்தவர் தண்டனையின்றித் தப்பித்துவிடுகிறார்.

கண்டுகொள்ளாத நிர்வாகம்

விமானத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை என்று சொல்லிவிட முடியாது.

பணிப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் விமானச் சேவை நிறுவனம், விமான நிலைய மத்தியப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் குற்றவாளியை ஒப்படைத்துவிடுவது வழக்கம்.

பல நேரங்களில் தவறு செய்தவரை வெறுமனே எச்சரித்துவிட்டு, விமான நிலைய அதிகாரிகள் வெளியே விட்டுவிடுகின்றனர்.

உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள விசாகா வழிகாட்டு நெறிமுறையின்படி இந்திய விமானக் கட்டுப்பாட்டு துறையில் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைப் புகார்களை விசாரிக்கும் குழு அமைக்கத் தவறியதற்குக் கடந்த ஆண்டு கடும் கண்டனம் எழுந்தது.

 விமானச் சேவை நிறுவனங்களும் இது போன்ற புகார்களை ஒப்புக்கு எடுத்துக்கொள்வதாகவும், தண்டனை அளிப்பதையோ, காவல்துறையிடம் வழக்கை ஒப்படைப்பதையோ விரும்புவதில்லை என்றும் அத்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் கருதுகிறார்கள்.

விமானத்துக்குள் பயணிகளால் ஏற்படும் சிறுசிறு அத்துமீறல் சம்பவங்களைப் பணிப் பெண்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவது நல்லது என்றே நிறுவனங்கள் விரும்புவதாகவும் தெரிகிறது.

ஏனெனில், ஒவ்வொரு முறை இது போன்ற செய்தி வரும் போதும், விமான நிறுவனப் பெயரும் வெளிவருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகி வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுவதே இதற்குக் காரணம்.

பல சம்பவங்களைப் பெரிதாக்க விரும்பாத நிறுவனங்கள் பணிப் பெண்களுடன் பேசித் தீர்த்துவிடுவதாகவே பெண் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். உணவுடன் மதுவும் வழங்கப்படுவதால், பன்னாட்டு விமானங்களில் பாலியல் அத்துமீறல்கள் பல மடங்கு அதிகமாக உள்ளன என்பதும் நிஜம்.

வேலையின் ஒரு பகுதியாக, அரிதாரம் பூசி, சிரித்த முகத்துடன் எல்லாரையும் சகித்துக்கொள்ளும் விமானப் பணிப் பெண்களைப் போகப் பொருளாகவே நினைக்கும் ஆண்கள் ஆகாயத்தில் என்ன செய்தாலும் தவறில்லை என்று நினைத்துவிட்டார்களா?

வெளியில் புன்னகையோடும் உள்ளே குமைச்சலோடும் இருந்த பணிப் பெண்களை, இதுபோன்ற அத்துமீறல்கள் தற்கொலை வரை தூண்டிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இந்த அத்துமீறலுக்கு அரசும் விமானச் சேவை நிறுவனங்களும் முடிவுகட்ட வேண்டும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!



1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர் - ஒரு சிறப்பு பார்வை..!



மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

*இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

*ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக்கும், விந்துவை அதிகரிக்கும், மேக நோய்களைக் குணப்படுத்தும், ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர்- உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

*இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது, இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன, அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை(Vein) மூலம் செலுத்தலாம்.

*இளநீர் மிக மிகச் சுத்தமானது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

*இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன, சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.

* பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

*இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து..!



உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் காபி, டீ-யில் தவறாமல் உபயோகப்படுத்துவது 'சுகர்ஃப்ரீ/ஈக்குவல்’ (Sugar free/Equal) எனும் வஸ்துவைத்தான். இன்றைக்கு இது அனைத்து ஹோட்டல்கள், வீடுகள் என்று எங்கெங்கும் நீக்கமற தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்ட பொருள் 'சாக்ரின்’. அதைப் பயன்படுத்தினால், 'சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வரலாம்’ என்று கருதப்பட்டதால், மெள்ள அந்த இடத்தை 'சுகர்ஃப்ரீ/ஈக்குவல்’ பிடித்துக் கொண்டது. சுகர்ஃப்ரீயின் வேதியியல் பெயர் அஸ்பார்டேம் (Aspartame).

இந்த 'அஸ்பார்டேம்’ சாக்ரினைவிட மிகவும் கெடுதலான பொருள் என்று உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், நூற்றுக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அசைக்க முடியாத மாபெரும் ராட்சத சக்தியாக 'அஸ்பார்டேம்’ வேரூன்றிவிட்டது. இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளை உங்களுக்குச் சொல்லவேண்டியது என் தார்மிகக் கடமை.

1971-ம் ஆண்டு 'ஸியர்லி’ என்கிற பிரபல மருந்து கம்பெனியின் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிலேட்டர், வயிற்றுப் புண்ணுக்கான மருந்துகளை சோதனை செய்து கொண்டிருந்தார். தற்செயலாக அவரின் விரலில் பட்ட வெள்ளை நிற பவுடரை சுவைத்தார். சீனியைவிட 500 பங்கு இனிப் பாக இருந்த அந்த பவுடர்தான் 'அஸ்பார்டேம்’. அன்று முதல் 'ஸியர்லி’ கம்பெனிக்கு அடித்தது யோகம்! 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ. (FDA-Food and Drug Administration) இதற்கு அனுமதி அளித்தது. அதற்குள், 'அஸ்பார்டேம் கெடுதலை உண்டு பண்ணலாம்’ என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநலப் பேராசிரியர் டாக்டர் ஓல்னி அஸ்பார்டேமுக்கு எதிராக தனி மனித போராட்டத்தையே தொடங்கினார். அஸ்பார்டேம் உட்கொண்ட எலிகளுக்கு மூளையில் புற்றுநோய் வருவதை நிரூபித்து, 'மனிதர்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம்’ என்ற கருத்துக்களை முன் வைத்தார். உடனே (1975) அஸ்பார்டேமுக்கு வழங்கிய அங்கீகாரத்தை வாபஸ் பெற்றது எஃப்.டி.ஏ. அதுவரை பணமழையில் நனைந்து வந்த 'ஸியர்லி’ கம்பெனி சும்மா இருக்குமா..? 'அஸ்பார்டேம் மிகவும் பாதுகாப்பானது’ என கிட்டத்தட்ட 200 மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது.

ஒரு விஷயத்தை 'கெட்டது’ என்று சொல்வதற்கும்... அதே விஷயத்தை 'நல்லது' என்று சொல்வதற்கும் இந்த டாக்டர்களே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறார்களே... என்று உங்களுக்கு ஆச்சர்யமாக / அதிர்ச்சியாக இருக்கிறதா? சக்தி வாய்ந்த மருந்து கம்பெனிகள் நினைத்தால், எந்த மாதிரி ஆராய்ச்சி முடிவுகளும் வெளியிட முடியும் என்கிற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன். 'ஒருவன் கொலைகாரன்’ என்று சொல்வதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்கள். 'அவனே நிரபராதி’ என்று வாதிடுவதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்களே, அதுபோலத்தான்.

'ஸியர்லி கம்பெனி வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோடிக்கப்பட்ட பொய்’ என்று டாக்டர் ஓல்னி வாதிட்டார். இதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஸ்கின்னர், விசாரணை கமிஷன் அமைக்காமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் (பிறகு இவர், ஸியர்லி கம் பெனியின் சட்ட ஆலோசகராகச் சேர்ந்து கொண்டது தனிக்கதை).

1984-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ரீகன், தன்னுடைய நெருங்கிய நண்பரான ஹேஸ் என்பவரை எஃப்.டி.ஏ-வின் புதிய தலைவராக நியமித்தார். அதே சூட்டோடு அஸ்பார்டேமுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அடுத்த வருஷமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸியர்லி கம்பெனியிலேயே சேர்ந்தார் ஹேஸ். க்ளைமாக்ஸாக 1985-ம் ஆண்டு ஸியர்லி கம்பெனியை விலைக்கு வாங்கிவிட்டது... 'மான்சான்டோ’.

முந்தைய சாக்ரினை உற்பத்தி செய்தது, இந்த மான்சான்டோ நிறுவனம்தான். பிரபல பூச்சிக்கொல்லி மருந்தாக உலகெங்கும் உபயோகிக்கப்பட்டு, தற்போது இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் தடை செய்து விட்ட டிடிடீ (DDT) உற்பத்தி செய்பவர்களும் இவர்கள்தான்.

தற்போது, உலகளவில் முக்கால் பங்கு அஸ்பார்டேமை உற்பத்தி செய்வது மான்சான்டோ. மீதி கால்பங்கு உற்பத்தி செய்வது யார் தெரியுமா... அஜினோமோட்டோ! உலகெங்கிலும் உள்ள சமையல் அறைகளைக் கெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் 'மானோசோடியம் குளுடாமேட்’ (MSG) என்கிற வேதிப்பொருள் கலந்த அஜினாமோட்டோவை உற்பத்தி செய்பவர்கள்தான் இவர்கள். இந்த இரண்டு பேரின் பிடியில் சிக்கியுள்ள அஸ்பார்டேம், நீங்கள் அன்றாடம் பருகும் காபி, டீயில் தவறாமல் இடம் பிடித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்...!


திருமணமான புதியதில்


1. கணவர் கூப்பிடாத போதே…என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.


சிறிது ஆண்டுகள் கழித்து


1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.


பல ஆண்டுகள் கழித்து


1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு

இயற்கை வயாக்ரா வெந்தையம்..!

சித்தர்கள் போற்றும் இயற்கை வயாக்ரா வெந்தையம்..!


இன்றைக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே மருத்துவகுணம் கொண்டவைதான். உடல் சக்தியோடு உணர்வுகளோடும் தொடர்புடைய பொருட்களைத்தான் தினசரி நாம் உண்கின்றோம்.

அந்தவகையில் அன்றாடம் உபயோகிக்கும் வெந்தையம் இரும்பு சக்தி அதிகரிப்பதோடு மனிதர்களின் பாலுணர்வை தூண்டும் பொருளாக உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி" என தேரயர் சித்தர் அன்றே வெந்தையத்தைப் பற்றி கூறியுள்ளார். தற்போதைய ஆய்வுகளும் இதனை நிரூபித்துள்ளன.

வெந்தையம் என்பதை வெந்த அயம் என்று பிரிக்கின்றனர் சித்தர்கள். அயம் என்பது அயச்சத்தான இரும்புச்சத்து ஆகும். உணவை சொரிக்கச் செய்து சக்தியைப் பெற்று உடலில் சீரான இயக்கத்துக்கு உதவுவது இரும்புச் சத்தாகும். தினசரி வெந்தையம் சாப்பிட மனித உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தங்களின் ஆய்விற்காக 25 வயது முதல் 52 வயதுடைய 60 ஆரோக்கியமான மனிதர்களை தேர்ந்தெடுந்து தினசரி இரண்டு வேளை 6 வாரங்களுக்கு வெந்தயம் சாப்பிடக் கொடுத்தனர்.

வெந்தையம் சாப்பிடும் முன்பு இருந்த அவர்களிடம் குறைவாக இருந்த பாலுணர்ச்சி வெந்தையம் சாப்பிட்ட பின்னர் மூன்று முதல் 6 வாரங்களில் அதிகமாக இருந்தது தெரியவந்தது. வெந்தயம் சாப்பிட்டவர்களுக்கு சராசரியாக 16 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை பாலுணர்ச்சி அதிகரித்திருந்தது.

மேலும் வெந்தயமானது ஆண்களின் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரித்திருந்ததாம். எனவே பாலுணர்வு தூண்டப்படுவதில் பிரச்சினை உள்ளவர்கள் கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட வெந்தயம் சாப்பிடலாம் என்று ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தினமும் உடல் உறவு கொண்டாலும் அதனால் உண்டான விந்திழப்பை அன்றே சரி செய்து மீண்டும் குறைந்ததை ஈடுசெய்து விடும் வல்லமை வெந்தயத்துக்கு உண்டு. இதை இயற்கை வயாக்ரா என்று மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

"போகக்கு மனந்தளிக்கும் நித்த முறை விந்துவையுண்டாக்கும் மனமே யறி" என தேரயர் சித்தர் அன்றே வெந்தையம் பற்றி கூறியுள்ளார். வெந்தயத்தில் "புரோட்டோ டயசின்" என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது. இது இயற்கை வயாக்ரா என்று அழைக்கப்படுகின்றது.

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!



 வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.

அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும்.

14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:

M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T – 190 Kmph H – 210 Kmph V – 240 Kmph W – 270 Kmph Y – 300 Kmph ZR – over 240 Kmph.

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம்..!

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம் ஜெர்மனி தோட்டக்காரர் சாதனை


ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார்.

அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன.

இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் தோட்டக்காரனாக பணி புரிந்தேன். அந்த நர்சரி பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும்.

அதில் ஒரு வரிசையில் சுமார் 90 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும். அப்போதிருந்தே நான் ஆப்பிள் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு என்னிடம் இல்லை. எனவே எனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரத்தையே பல்வேறு ரகங்களை கொண்ட ஆப்பிளை காய்க்கும் மரமாக வளர்க்க திட்டமிட்டேன்.

கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு ரக ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து எனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருகிறேன். தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள எனது ஒரே ஆப்பிள் மரத்தில் சமையலுக்கு பயன்படும் அமெரிக்க ஆப்பிள் முதல் 1883ம் ஆண்டு ரகத்தைச் சேர்ந்த வித்திங்டன் பில்பாஸ்கெட், 1908ம் ஆண்டைச் சேர்ந்த எட்டீஸ் மேக்னம் போன்ற பல்வேறு ரகங்களும் எனது மரத்தில் காய்த்து குலுங்குகின்றன என்கிறார் பெருமையுடன்.

இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர்.

உங்கள் கம்ப்யூட்டரின் சாவி இனிமேல் உங்கள் பென்டிரைவ்-தான்..!



உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல...உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போன்று உங்களுடைய கம்ப்யூட்டருக்கும் ஒரு பூட்டுச்சாவி இருந்தால்... நன்றாகத்தானே இருக்கும்.

அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது.

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம்.

பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா?

pen drive-as-key-for-computer

முடியும் நண்பர்களே..!

இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம்.

இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும். மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?

இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை  எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.

3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.

4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.

5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)

6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.

7. இறுதியாக கிரியேட் கீ - Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.

அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.

30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும்.
இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும்.

இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்

இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.

ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.

முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...!

இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய : Download Predator என Google Search -ல் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள்.

'' தலைச்சிறந்த எழுத்தாளர் '' ஜெயகாந்தன் - வாழ்க்கை வரலாறு



ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டு, தமிழ் இலக்கியத்திற்கு அருட்தொண்டாற்றியவர் ஜெயகாந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். மேலும், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறைப் பெற்றார். ‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என்று பல்வேறு விருதுகளுக்குத் தகுதியான ஜெயகாந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 24, 1934

பிறப்பிடம், கடலூர், தமிழ்நாடு, இந்தியா

பணி: எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்

நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு

ஜெயகாந்தன் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்


ஜெயகாந்தன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும், அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும், அவரது தந்தைக்கும் சுமூகமானப் பேச்சுவார்த்தை இல்லாமல், இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதனை சற்றும் தாங்கிக் கொள்ள இயலாததால், அவர் தனது 12 வது வயதில் வீட்டை விட்டு ஓடி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அங்கு, அவரது மாமா அவருக்கு கம்யூனிச கொள்கைகளையும், சுப்ரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலக்கியம் மீது ஆர்வம் 

சிறிது காலம் கழித்து, ஜெயகாந்தன் அவர்களுடைய தாயார் அவரை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப் பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார்.

அக்கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அக்கட்சி உறுப்பினர்களைத் தனது குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அங்கத்தினரான ஜீவானந்தம் என்பவர், அவருக்குத் தமிழாசிரியர் ஒருவரை அவருக்குக் கல்வி கற்றுத் தருமாறு பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார்.

1949ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அக்கட்சிக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதன் பொருட்டாக, அவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு காலணிகள் விற்கும் கடையில் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், புதிய கட்சிகளின் வருகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக அழிந்ததால், காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

எழுத்துலக வாழ்க்கை

ஜெயகாந்தன் அவர்கள், அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களான சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்றவற்றில் அவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது மிகவும் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்” என்ற படம், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ‘குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதான பத்ம பூஷன் விருதை’ பெற்றது.

அவரது படைப்புகள்

ஜெயகாந்தன் அவர்கள், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். அதில் சில குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:

‘வாழ்விக்க வந்த காந்தி 1973’, ‘ஒரு கதாசிரியனின் கதை’, ‘பிரம்ம உபதேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’, ‘கண்ணன்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ரிஷிமூலம்’, ‘கருணையினால் அல்ல’, ‘கங்கை எங்கே போகிறாள்’, ‘ஒவ்வொரு கூரைக்கும் கீழே…’, ‘சுந்தர காண்டம்’ மற்றும் பல.

தமிழ்த் திரையுலகில் இவருடைய கதைகள் பல திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. அவை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச் செருப்பு’.

அவர் இயக்கிய திரைப்படங்கள்: ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, மற்றும் ‘புதுச்செருப்பு கடிக்கும்’

விருதுகள்

1972 - சாஹித்ய அகாடமி விருது

2002 – இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

2011 – ரஷ்ய விருது
காலவரிசை

1934: தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார்.

1950: அவரது இலக்கிய வாழ்க்கையை 1950களில் தொடங்கினார்.

2002: இலக்கியத்திற்காக இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ‘ஞான பீட விருதைப்’ பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

2009: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’, இலக்கியத்துறைக்காக முதல்முறை வென்றார்.

வாழ்க்கையை மேம்படுத்தும் 25 நற்சிந்தனைகள்..!



01. அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும்.

02. தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித் தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன் கருத்து.

03. தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் விரயமாகிறதே அல்லாமல் வேறெதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

04. அச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள் பகைவனாகும். அதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

05. வாழ்க்கையில் சின்னச் சின்ன விடயங்கள் கூட பெரிய பெரிய சந்தோசத்தை அள்ளித்தரக் கூடியவை. அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விடயங்களை முடிப்பதன் மூலம் பெரிய சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.

06. நமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான் முடிவைத் தீர்மானிக்கப் போகிறது. ஆக்கபூர்வமான எதிர்பார்ப்பை தெரிவு செய்யுங்கள் ! வெற்றியை எதிர் பாருங்கள். ஆனால் வெற்றி நாளை வருமென்று மனதிற்கு தகவல் கொடுக்காதீர்கள். வெற்றி இதோ இதைப்படிக்க வந்திருக்கிறீர்களே இக்கணம்தான் வெற்றி.

07. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின் உள்ளேயுள்ள திசைகாட்டியின் வழியே நடவுங்கள். அதுதான் உள்ளிருப்பதை வெளிக்காட்டி வெற்றிகொள்ளும் வழிமுறையாகும்.

08. இடர்களை எதிர் கொள்ளத் துணிந்தவன் மட்டுமே உண்மையில் சுதந்திர மனிதனாகும். இடர்களை எதிர் கொள்ள தயங்குவோர் விலங்கு ப10ட்டிய அடிமைகள்.

09. ரிஸ்க் எடுப்பது அவசியம், அதை குழந்தைகளின் சிறிய நடைபோல சிறிது சிறிதாக பிரித்து எடுத்தால் பாரம் தெரியாமலே இலக்கை அடைந்துவிடலாம்.

10. எல்லாவித மகிழ்வுகளையும் இழந்து தலைமைப் பதவியை அடைந்த ஒருவர் தனது வெற்றி கூட தவறான பாதையில் சென்றுவிட்டதைக் கண்டு கொண்டார்.

11. வெற்றி என்பது ஒரு தொடர் நடவடிக்கை, அது ஓர் உணர்வு. நான் யார் என்னவாக இருக்கிறேன், எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என்பதுபற்றி நமக்குள்ளே ஜொலிக்கும் இதமான உணர்வுதான் வெற்றி !

12. அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப் போவதால் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறோம். ஒரு கட்டத்தில் இலட்சியத்தையே மறந்துவிடுகிறோம். ஆகவேதான் நேரத்தை நழுவ விட்டுவிடக் கூடாது.

13. இதுவரை நீங்கள் பெற்றிருப்பதற்காக செலுத்தும் நன்றிகள் அந்த நன்மைகளை தொடர்ந்து பெருகச் செய்யும்.

14. பணப்பற்றாக்குறை இருக்கிறது என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள். என்வாழ்வில் ஏராளமாக பணம் சேர்கிறது என்ற எண்ணத்தை மனதிற்கு வழங்கி அமைதி காணுங்கள், பின்னர் அவதானியுங்கள் வளங்கள் பெருகியிருக்கக் காண்பீர்கள்.

15. தாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலை, பரவசமானதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் அமையப் பெற்றவர்கள் மிகவும் சந்தோசமானவர்கள்.

16. நாம் வலுவாக நினைக்கும் ஒன்று நமக்குக் கிடைக்கிறது.

17. பிரச்சனையில் கவனம் செலுத்துகிறோமா அல்லது தீர்வில் கவனம் செலுத்துகிறோமா என்பதை யோசித்து நடக்க வேண்டும்.

18. ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு 25 விதமான வழி முறைகள் உள்ளன. எனவேதான் உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல்வேறு விதமான வழிகளை தேடுவதில் நாட்டம் காணுங்கள்.

19. வேகமாக ஓடுவோர் ஒரு கட்டத்தில் களைத்து நின்றுவிட வேண்டி வரும். சாவகாசம், நிதானம் என்பதே களைப்பின்றி பயணிக்க ஏற்ற மருந்தாகும்.

20. இந்த வாரமாவது உங்கள் வேக வியாதியை கொஞ்சம் ஒத்தி வையுங்கள், சாவகாசமாக, நிதானமாக செயற்படுவதில் உள்ள பரவசத்தை அனுபவியுங்கள்.

21. வெற்றியை புகழ்ந்து பாராட்டும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதும், செய்ய முடிகிறதுமான காரியம் இதுவாகும்.

22. நாம் ஒழுங்காக செய்ததைவிட ஒழுங்குபட செய்யாத காரியத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தி கவலைப்பட்டு வருகிறோம்.

23. குறைகளை பார்ப்பதை விடுத்து, உங்கள் வெற்றிகளையும், மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள்.

24. வெற்றிகரமாக வாழ விரும்பினால் - செம்மையான செயற்பாடு .. - என்பதற்கு விடைகொடுக்க வேண்டி வரும்.

25. செம்மையோ செம்மை என்ற மனோபாவம் நம்மிடமிருந்து விடுபடுவதற்கான பயிற்சியை மேற் கொள்வோம். திருத்தம், செம்மை என்பதை விடுத்து நன்றாக சிறப்பாக செயற்படுவதில் நாட்டம் கொள்வோம்.

ஆதிக்கம் செய்யும் குழந்தைகளை கையாள்வதற்காக பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்...!



ஆதிக்கம் செய்யும் உடன்பிறப்புக்களை கையாளுவது இந்த காலத்தில் மிகவும் முக்கியமான செயலாகவும், கவனத்துடன் செய்ய வேண்டிய காரியமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகள் வீட்டில் உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இவர்களின் ஆளுமைத்தனத்திலிருந்து வீட்டையும், மற்ற குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.

இப்படி ஆதிக்கம் செய்யும் குழந்தைகளை கையாளும் போது நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் சரியான சமயத்தில் அவர்களை திருத்தாவிட்டால், அது வீட்டையே பெரும் போர்க்களமாக மாற்றிவிடும்.

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டியது அவர்களது கடமையாகும். அதுமட்டுமில்லாமல் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அவர்களை வளர்க்க வேண்டும். இப்படி இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் அடங்காத உடன்பிறப்புக்களை எப்படி சமாளிப்பது என்பது பெரும் போராட்டமாகவே உள்ளது.

இப்படிப்பட்ட ஆளுமை செய்யும் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தத்தளிக்கும் பெற்றோர்களுக்கு இதோ சில டிப்ஸ்!


பிரச்சனையை புரிந்து கொள்ளுங்கள்

இப்படிப்பட்ட குழந்தைகளை சரி செய்ய நினைப்பதற்கு முன் நாம் கண்டறிய வேண்டியது அவர்களின் நடத்தை பற்றிய விபரங்களையே. அவர்கள் எப்போது அத்தகைய குணங்களை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லது இதர சகோதர, ககோதரிகளை அடித்து அல்லது திட்டி புண்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


விதிகளை அமைத்து அவர்களை அதை பின்பற்றச் செய்யுங்கள்

 உடன்பிறந்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்திருத்தல் அவசியம். அதை அவர்களிடம் வலியுறுத்தி எப்போதும் கடைபிடிக்கும் வகையில் செய்ய வேண்டும். இதை எப்போதும் கடைப்பிடிக்க நேர்ந்தால் ஆதிக்கம் செலுத்துவது என்பது காணாமல் போய் வீடும்.


பெற்றோர் என்ற பதவியை பயன்படுத்துங்கள்

 நீங்கள் பெற்றோர் என்ற இடத்தில் இருந்து உங்கள் பிள்ளையை திருத்த வேண்டும். சக உடன்பிறப்புகளிடம் இப்படி நடப்பது தவறு என்பதை உணர்த்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வரப் பாருங்கள். அன்பாகவும், அடக்கு முறையையும் பயன்படுத்தி இதை செய்யலாம்.


மாற்றத்திற்காக காத்திருங்கள்

 குழந்தைகள் அவர்களின் ஆளுமை செய்யும் காரியங்களை சீக்கிரம் விட்டுக் கொடுப்பது கிடையாது. சிறிது காலத்திற்கு சில பிரச்சனைகள் வரக்கூடும். இதை எல்லாம் தாங்கிக் கொள்ளுங்கள். சிறிது காலத்திற்கு பின் நமக்கு நல்ல மாற்றம் தெரியவரும். மாற்றம் வரும் போது பயன் பெறுபவர்கள் நாமும், நமது குழந்தைகளும் தான்.


பாராட்டு தெரிவித்தல் 

ஆதிக்கம் செய்யும் குழந்தைகளின் சிறிய சிறிய நல்ல காரியங்களை கூட எப்போதும் ஊக்குவித்து பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். வாயின் வழியாக பாராட்டுவதை விட ஏதேனும் சிறிய பரிசாக இருந்தாலும் அவர்களிடம் கொடுத்து மகிழ்ச்சி படுத்த வேண்டும். இது ஒரு சிறந்த வழியாக அமையும். அவர்களை அன்புடன் பாராட்டும் போது அவர்களும் உங்கள் வழிக்கு வருவார்கள்.


இருவரும் சேர்ந்து முயற்சி செய்யுங்கள்

 தம்பதியரான நீங்கள் எப்போதும் இத்தகைய காரியங்களை எப்படி சாமாளிப்பது அல்லது குழந்தையை எப்படி திருத்துவது என்பதை முன்பாக கலந்தாய்ந்து இருவரும் ஒரு முடிவை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லை என்றால் அவர்களை திருத்த முடியாமல் போகும்.


பொறுமையாக இருக்கவும்

 உடனுக்குடன் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பது உண்மையில் நடக்காத காரியமாகும். குழந்தைகள் இத்தகைய மாற்றங்களை உடனடியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பொறுமையாக உங்கள் திட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம், எப்படி இத்தகைய பிள்ளைகளை சமாளிப்பது என்ற கேள்விக்கான விடைகளை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

 
நண்பேன்டா