Tuesday, 11 February 2014
இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்..!
இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!
பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும், பாலிதீன் பையில் வைக்கக் கூடாது. இதே போன்று கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.
ஆனால் தற்போது கடைகளில் வாங்கப்படும் தேனில் சுவை மற்றும் பலவற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.
இதேபோன்று பூசணிக்காய், பிரட், தக்காளி, அன்னாசி போன்றவற்றையும் பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment