Tuesday, 11 February 2014
‘யூ டியூப்பிற்கு’ போட்டியாக ‘மெஹ்ர்’..!
உலகம் முழுவதும் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வீடியோ வலைதளம் யூ டியூப். இது கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த வலைதளத்திற்கு போட்டியாக ஈரான் அரசு ‘மெஹ்ர்’ எனும் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது.
மெஹ்ர் என்றால் தமிழில் அன்பு என்று அர்த்தம்.அமெரிக்காவைக் சேர்ந்த நகோலா பாசிலி நகோலா எனும் இயக்குனர் முகமது நபிகளையும் முஸ்லிம் மக்களையும் இழிவுபடுத்தி திரைப்படம் ஒன்றை எடுத்தார். இதனை விளம்பரப்படுத்தும் நோக்கில் பாதிரியார் ஒருவர் யூ டியூப் வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனைப் பார்த்த உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த படத்தை யூ டியூப் வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு கூகுள் நிறுவனம் மறுத்தது.இதனையடுத்து அரபு நாடுகளில் யூ டியூப் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அரபு மக்களையும், பாரசீக மொழி பேசும் மக்களையும், ஈரான் நாட்டின் கலாச்சாரத்தையும் ஈர்க்கும் வகையில் ஈரானின் ஒளிபரப்புத்துறை இந்தப் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது.
இதில் ஈரான் மக்கள் தங்களது வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதோடு, ஈரான் ஒலிபரப்புத்துறை வெளியிடும் வீடியோக்களையும் கண்டுகளிக்கலாம் என ஈரான் ஒளிபரப்புத்துறை துணித் தலைவர் லொத்பொல்லாஹ் சியாஹ்காலி தெரிவித்துள்ளார். இதனைப் உலகம் முழுவதும் பிரபல்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் கணக்குத் தொடங்கி மக்களின் ஆதரவும் பெறப்பட்டு வருகிறது.
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment