Monday, 24 February 2014

தொழில்நுட்ப கோளாறு: கொஞ்ச நேரம் புஸ்ஸாப்போன வாட்ஸ்ஆப்..!



லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபேஸ்புக் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சிறுது நேரம் பாதிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் ஆன்லைன் மெசேஜ் சேவையான வாட்ஸ்ஆப் நேற்று மதியம் 2.30 மணி அளவில் வேலை செய்யவில்லை. இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட இமெயில்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் விளக்கம் அளிக்கவில்லை.

சிறுது நேரத்தில் வாட்ஸ்ஆப் மீண்டும் வேலை செய்வதாக ட்விட்டரில் பலர் தெரிவித்தனர். மெசேஜ் சேவை மீண்டும் வேலை செய்வதாகவும், தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும் வாட்ஸ்ஆப் ட்விட்டரில் தெரிவித்தது.

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவன சேவையில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். கடந்த மே மாதம் முதல் மாதத்தில் ஒரு முறையாது இது போன்று பிரச்சனை ஏற்படுவதாக வாட்ஸ்ஆப் ட்வீட் செய்து வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சேவையை 450 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1 பில்லியன் ஆகும் என்று ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ மார்க் ஜக்கர்பர்க் நம்புகிறார்.

அற்புதங்கள் நிறைந்த கோவைக்காய்..!

அற்புதங்கள் நிறைந்த கோவைக்காய்


வேலிகள், தோட்டங்கள் மற்றும் காடுகளில் பரவலாக காணப்படும் கோவைக்காயை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.

கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாக பிரிக்கலாம்.

இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற தன்மைகளை கொண்டது.

மருத்துவ பயன்பாட்டிற்காக இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு போன்ற அனைத்தும் உபயோகிக்கப்படுகின்றன.

கோவை இலையின் தனிச்சிறப்புகள்

· கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.

· கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.

· கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாக காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

· கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

கண்களை பிரகாசமாக்கும் கோவைக்காய்

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் கனணி முக்கிய பங்கு வகிப்பதால் கண்கள் மிகவும் சோர்வடைந்து அதன் நரம்புகள் பாதிக்கப்படுகின்றது.

இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதுடன் கண் நரம்புகளும் வலிமை பெறும்.

தோல் கிருமிகள் நீங்க

தற்போது சொரி,சிரங்கு போன்ற பல்வேறு விதமான தோல் வியாதிகள் உருவெடுத்து மக்களை அவதிக்குள்ளாக்குகின்றது.இதை குணப்படுத்த கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை ஆகிய நான்கையும் சம அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

இதன்பின் இவையனைத்தையும் ஒன்றாக அரைத்து, சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் ,உடலெங்கும் பூசி ,ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

மேலும் கோவை இலைச்சாறுடன் வெண்ணெயை சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

வியர்க்குருவை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது.

இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்..?



எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.

இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் முன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.

விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா..?



விந்தணுக்கள் நுண்ணறிவுத் திறனை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லுமா? சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்.

விந்தணுவைத் தர விரும்புபவருக்கு அழகு, உயரம், தீய பழக்கவழக்கங்கள் இல்லாத சிறந்த உடல்நலம் ஆகியன இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அந்த விளம்பரம், இந்தியாவின் தலையாய தொழில்நுட்பக் கல்விக்கூடங்களான ஐஐ.டி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்பதையும் தகுதியாக கூறியிருந்தது.

இந்தத் தகுதிகள் இருக்கும் நபரின் விந்தணுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இந்த விளம்பரத்தில் கூறியிருக்கிறார்கள்.

இந்த விளம்பரம் இப்போது இந்தியாவில் ஊடகங்களிலும் சமூக இணைய தளங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.ஐ.டி மாணவனின் விந்தணு தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருப்பது, அறிவு என்பது மரபணு மூலம் அடுத்த தலைமுறைக்கு மாறும் என்ற நம்பிக்கை சமூகத்தில் இருப்பதைக் காட்டுகின்றது.

‘மருத்துவ ஆதாரங்கள் இல்லை’

இந்த நம்பிக்கைக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது மரபணு விஞ்ஞான ரீதியாகவோ அடிப்படை ஏதும் இருக்கிறதா என்று சென்னை செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் செயற்கை கருத்தரிப்பு மருந்தியல்துறை தலைவருமான டாக்டர் என்.பாண்டியனிடம் கேட்டபோது, இவ்வாறான நம்பிக்கைகளுக்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லையென்று அவர் தெரிவித்தார்.

நுண்ணறிவுத் திறன் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்கு விந்தணுமூலம் மாறுகிறது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது என்றும் ஐஐடித் துறைச் சார்ந்தவர்கள் திறமையானவர்கள், மற்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்று கருதுவது தவறான அபிப்பிராயம் என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

சொந்த முயற்சி, சூழல் மற்றும் அனுபவங்கள் மூலம் மட்டுமே நுண்ணறிவுத் திறமையாளர்கள் உருவாவார்கள் என்பதற்கான ஆதரங்களே உள்ளதாகவும் டாக்டர்  கூறினார்.

உங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த டிப்ஸ்..!



உங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில்  முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உள்லேடுப்பதன் மூலம் கட்டாயம் உங்கள் உடலேடையை அதிகரிக்க முடியும்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

முட்டை

அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.

வெண்ணெய்

அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது

ஜூஸ்

உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.

கோதுமை பாண் 

தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பாண்  வாங்கும் போது, கோதுமை பாணிநை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.


ஓட்ஸ்

காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.

தயிர்

பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

உருளைக்கிழங்கு

கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை (WiFi) பயன்படுத்தலாம்..!



இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.

அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பல காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘வைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘வைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.

வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘வைபை’ கண்டுபிடிப்பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘வைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமூகஇணைய தளத்திலும்..!



ஏதோ ஒரு ஆசையில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக தளங்களில் கணக்கு தொடங்கி வைத்திருப்போம்.....இதனை எல்லாம் ஒழுங்காக பராமரிக்கின்றோமா என்றால் அது கேள்விக் குறியே....

ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் ஒவ்வொரு சமூக தளமாக திறந்து அதற்கு Status update செய்தே அதிகபடியாக நேரத்தை வீணாக்கி ஓய்ந்து விடுவார்கள்..

இதனை தவிர்த்து மிக இலகுவாக ஒரு கிளிக்கிலேயே அனைத்து சமுக தளத்திலும் உங்கள் Status ஐ updates செய்ய பயன்படுகின்ற ஒரு இணையத்தளம் Hellotxt இணையத்தளமாகும்

Hellotext தளத்தின் சிறப்பம்சங்கள்

ஒரே கிளிக்கில் 50க்கு மேற்பட்ட சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்து கொள்ளலாம்

சமூக தளங்களுக்கு செல்லாமலேயே உங்கள் நண்பர்களுடைய Status இனை அறிந்து கொள்ளலாம்

ஈமெயில், SMS  இன் வாயிலாகவும் சமூக தளங்களில் உங்கள் Status இனை Updates செய்ய hellotxt தளம் வழிவகை செய்கிறது


இத்தனை வசதிகளையும் Hellotxt தளம் சென்று பதிவு செய்து கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்..

Facebook இல் கணக்கு உடையவர்கள் இதற்கென தனியாக கணக்கு திறக்க வேண்டிய அவசியம் இல்லை. Facebook இன் மூலமாகவே உள்நுழைந்து கொள்ளலாம்

உள் நுழைந்த பின் Network என்பதை அழுத்தி உங்கள் சமூக தளங்களை இணைத்துக் கொள்வதன் மூலம். hellotxt தளத்தில் இருந்து உங்கள் சமூக தளங்களுக்கு விரைவாக status இனை updates செய்து கொள்ளலாம்

நல்ல அடர்த்தியான மீசையைப் பெற உதவும் சில வழிகள்..!



ஆண்களுக்கு அழகே மீசை தான். அதிலும் முறுக்கு மீசை வைத்துள்ள ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டைல் ஒரு பிரபலமாக இருந்தது. மேலும் ஆண்கள் முறுக்கு மீசை வைத்தால், அவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுவார்கள். அப்படி கம்பீரமான தோற்றம் இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம்.

ஏனெனில் பெண்களுக்கு நல்ல கம்பீரத்துடன் இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும். ஆனால் தற்போதுள்ள ஆண்களுக்கு மீசை வளர்வதே கடினமாக உள்ளது. இதற்கு காரணம் ஹார்மோன் பிரச்சனைகள், பரம்பரை, வாழ்க்கை முறை மற்றும் உண்ணும் உணவுகள் தான்.

பொதுவாக ஆண் ஹார்மோன்கள் குறைவாக இருந்தால் தான், மீசையின் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். ஆனால் ஒருசில செயல்களை தினமும் முயன்றால், நிச்சயம் நல்ல அடர்த்தியான மீசையைப் பெறுவதுடன், நல்ல கம்பீரமான தோற்றத்தைப் பெற்று, பெண்களை எளிதில் கவரலாம்.

சரி, இப்போது நல்ல அடர்த்தியான மீசையைப் பெற உதவும் சில வழிகளைப் பார்ப்போம்!!!

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் மீசையின் வளர்ச்சியானது உள்ளது. ஆகவே புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான பீன்ஸ், முட்டை மற்றும் மீன் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.


விளக்கெண்ணெய் மீசையின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் பொருட்களில் மிகவும் சிறந்தது. அதற்கு தினமும் விளக்கெண்ணெய் கொண்டு மீசை வளரும் பகுதியில் 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.


இவை கூட மீசையின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுபவைகளே. அதற்கு நெல்லிக்காய் எண்ணெயில் கடுகு கீரையை சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை மீசை வளரும் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் சேர்த்து கலந்து, அதனை மீசை வளரும் பகுதியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். பின் அவ்விடத்தில் மறக்காமல் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சாறானது வறட்சியை ஏற்படுத்தும்.


தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களானது செல்வதற்கு வழிவகுக்கும். இதனால் மீசையின் வளர்ச்சியும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.


ரோஸ்மேரி எண்ணெய், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை மீசை வளரும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையின் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.


மேற்கூறியவற்றையெல்லாம் முயற்சித்தப் பின்னரும் எந்த ஒரு மாற்றமுங்ம தெரியாவிட்டால், மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை தெரிந்து, அவற்றை சரிசெய்து வந்தால், மீசையின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நாய்க்குட்டிக்கான பல் பராமரிப்பு டிப்ஸ்கள்...!


நீங்கள் ஒரு புதிய நாய்க்குட்டியை வாங்கியுள்ளீர்களா? அனைவரை போலவும், நீங்களும் ஆனந்தத்தில் குதித்து மகிழ்வீர்கள். அதன் நன்மைக்காக அனைத்து உடல்நல பராமரிப்புகளையும் மேற்கொள்வீர்கள். அதற்காக ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளையும் வாங்கத் தொடங்கியிருப்பீர்கள். அதற்கு சீரான நடைப்பயிற்சியையும் கொடுக்க ஆரம்பித்து இருப்பீர்கள். எல்லாம் நல்லது தான். அதே போல் கால்நடை மருத்துவரை முதல் முறை அணுகி, ஒரு ஊசி போட்டு விட்டால் போதும், பல வகையான நோய்களில் இருந்து உங்கள் செல்லப்பிராணி பாதுகாப்பாக இருக்கும்.

கேட்பதற்கு எல்லாம் நன்றாக உள்ளதா? நீங்கள் புதிதாக கொண்டு வந்த நாய்க்குட்டி ஒரு பிறந்த குழந்தையை போலத் தான். ஒரு குழந்தையை போல், அதற்கும் பல் அரும்பும் போது பார்க்கும் அனைத்தையும் அது கடிக்க ஆரம்பித்து விடும். ஆம், பல் மருத்துவரை அணுகி, உங்கள் நாய்க்குட்டியை அவரிடம் சீரான முறையில் அழைத்துச் செல்லும் நேரம் இது. ஒரு நொடிப் பொழுதில் உங்கள் நாய்க்குட்டிக்கு அனைத்து பற்களும் நன்றாக வளர்ந்துவிடும்.

அதன் பின் தொற்றுக்களும் ஒட்டிக் கொள்ளும். உங்கள் நாய்க்கு வலியை வெளிக்காட்ட தெரியாததால், அதன் வலியை நம்மால் உணர முடிவதில்லை. அதனால் இம்மாதிரியான விஷயங்களின் மீது ஆரம்பத்திலிருந்தே நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பல் மருத்துவரிடம் செல்வது போக, நாங்கள் கூறும் பற்களுக்கான சில டிப்ஸ்களையும் பின்பற்றுவது நல்லது. அதனால் அதன் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

தன் வாயை கையாளுவதை அதை ஏற்கச் செய்யுங்கள்

 உங்கள் நாய்க்குட்டியின் வாயை யாராவது திறந்து கையை உள்ளே விடுவது அதன் நன்மைக்காகத் தான் என்பதை அதற்கு ஆரம்ப கட்டத்திலேயே புரிய வையுங்கள். இதனால் அதன் பல் சோதனை சீரான முறையில் ஒழுங்காக நடை பெரும். இதற்கென விசேஷ நேரத்தை ஒதுக்காதீர்கள். அது கண்டிப்பாக ஒத்து வராது. உங்கள் நாய்க்குட்டி உங்கள் மடி மீது வரும் போதெல்லாம், அதன் வாயை திறந்து சோதித்து பாருங்கள். அது சுகமின்மையை உணர்ந்தால், அதனிடம் பேச்சு கொடுத்து அதன் கவனத்தை திசை திருப்புங்கள்.

நாய்க்குட்டியின் பற்களை துலக்குதல் 

நாய்க்காக பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டுள்ள கோரப்பல் டூத் பிரஷை வாங்கியவுடனேயே, உங்கள் நாய்க்குட்டிக்கு பல் துலக்கும் வேலையை தொடங்குங்கள். 45 டிகிரி கோணத்தில் இருக்கும் முள்ளரும்பை கொண்ட இரண்டு தலை ப்ரஷ் உங்கள் நாய்க்குட்டியின் பற்களை துலக்க மிகவும் உதவிடும். குழந்தைகளை போல், நாய்க்குட்டியும் முதலில் அதனை தடுக்க முயலும். நீங்கள் தான் பொறுமையுடன் செயல்பட்டு அதனை மெதுவாக இந்த பழக்கத்திற்கு மாற்ற வேண்டும். அளவுக்கு அதிகமாக துலக்கி விடாதீர்கள். அது சும்மா இருக்கும் நேரத்தில் இதனை செய்திடுங்கள். முதலில் சிறிது நிமிடங்களுக்கு மட்டும் அதனை செய்திடுங்கள். உங்கள் நாய்க்குட்டிக்கு இது பழகியவுடன் நேரத்தை சற்று அதிகரித்து கொள்ளுங்கள்.

சீக்கிரமாக தொடங்குங்கள்

 நாய்க்குட்டி உங்கள் கைக்கு வந்த உடனேயே, பற்கள் பராமரிப்பு பயிற்சியில் அதனை ஈடுபடுத்த தொடங்கி விட வேண்டும். இப்பயிற்சிகளை சீக்கிரமாக தொடங்கி விடுவதே நல்லது. அப்போது தான் வளரும் போது, இப்பழக்கங்களுடன் வேகமாக அது ஒன்றி விடும். வளர்ந்த பின் அதனை பழக்கப்படுத்துவது சிரமமாகி விடும். இது ஒரு பழக்காமாகவே அதற்கு மாறி விடும். தாமதமாக பயிற்சியை தொடங்கினால் அதனை கட்டுப்படுத்துவது கஷ்டமாகி விடும். சரியான பற்பசை மனிதனின் பற்கள், நாய்க்குட்டியின் பற்களை விட வித்தியாசமானவை. அதனால் நீங்கள் பயன்படுத்தும் பற்பசையை உங்கள் நாய்க்கு கொடுக்காதீர்கள். அது அவ்வளவு பயனை அளிக்காது. நாய்கென விற்கப்படும் பற்பசையை கடைகளிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். செல்லப்பிராணிகளின் கடைகளுக்கு சென்று, ஃப்ளோரைட் போன்ற கனிமங்கள் இல்லாத பற்பசையாக பார்த்து வாங்குங்கள். அவை நாய்களுக்கு விஷத்தன்மையை உண்டாக்கி விடும்.

விளையாட்டு பொருட்களை மெல்லுதல்

 நாய்க்குட்டியின் பற்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்ல ஐடியாவே. பல வித சிந்தடிக் எலும்புகள் மற்றும் மென்மையான விளையாட்டு பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. உங்கள் நாய்க்குட்டி பொருட்களை கடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், இவ்வகை பொருட்களை அதற்கு வாங்கிக் கொடுங்கள். அப்பொருட்களை மெல்ல விடுங்கள். இப்படி செய்வதால் அதன் பற்கள் திடமானதாக மாறும். அதனால் பாதுகாப்பான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. கால்நடை மருத்துவரிடம் சீரான முறையில் செல்லுதல் உங்கள் நாயின் மூச்சுக் காற்றில் திடீரென கெட்ட வாடை வீசினால், அல்லது அதன் உணவு பழக்கத்தில் திடீர் மாறுதல் ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுங்கள். எப்படி இருந்தாலும், பல் மருத்துவரை சீரான முறையில் சென்று சந்திக்க வேண்டும். அதற்கு காரணம் அதனால் வெளிக்காட்ட முடியாத வலிகளை அது அனுபவித்து வரலாம்.


 
நண்பேன்டா