Tuesday, 11 February 2014

ரூ.12 கோடியில் பிரமிக்க வைக்கும் ஆடம்பர மோட்டார் இல்லம்..!

கார், வேன், பஸ் போன்றவற்றை கூடுதல் வசதிகளுடன் மோட்டார் இல்லங்களாக மாற்றியது குறித்து பல செய்திகளை வழங்கியுள்ளோம். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் அஷ்டன் கட்சர் டிரெய்லரில் அமைக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான மோட்டார் இல்லத்தை வாங்கியுள்ளார். இரண்டடுக்கு மாளிகை போல் ஜொலிக்கும் இந்த மோட்டார் இல்லத்தை அவரது மனைவியும், பிரபல நடிகையுமான டெமி மூர் பயன்படுத்துகிறார். இந்த பிரம்மாண்ட நடமாடும் மாளிகையின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.





பிரம்மாண்டம்

‘தி ஹீட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் 53 அடி நீளம் கொண்ட இந்த ஆடம்பர மோட்டார் இல்லம் 30 டன் எடை கொண்டது.





இரண்டாவது தளம்

ஹைட்ராலிக் முறையில் இதன் இரண்டாவது தளம் மேலேழும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவர் மற்றும் பர்னிச்சர்கள் மடங்கி விரியும் வசதி கொண்டதாக இருக்கிறது. இரண்டாவது தளம் விரிவடையும்போது 1,100 சதர அடி பரப்புக்கு இடவசதி கிடைக்கும்.




சாலையில் இயக்க கட்டுப்பாடு

முழுவதுமாக மேலே விரிவடையும்போது 15 அடி 10 இஞ்ச் உயரம் கொண்டதாக இருக்கும். ஆனால், அமெரிக்க போக்குவரத்து துறை சாலையில் செல்லும்போது 13 அடி 6 இஞ்ச் மிகாமல் இருக்கும் வகையில் செல்ல வேண்டும் என்று அனுமதி வழங்கியுள்ளது.



பெட்ரூமுக்கு பூட்டு 

இந்த மோட்டார் இல்லத்தின் பெட்ரூம் கைரேகை அடையாளத்தின் மூலமே பயன்படுத்துபவர் தவிர கூடுதலாக ஒருவர் மட்டுமே திறக்க அனுமதிக்கும்.




வசதிகள் 

இந்த ஆடம்பர மோட்டார் இல்லத்தில் ஏழு இடங்களில் 60 இஞ்ச் 3டி தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2 குளியலறைகள், கிரானைட் பினிஷிங் கொண்ட சமையலறை, கூட்ட அரங்கம் என பலவிதமான வசதிகளை கொண்டிருக்கிறது.




கிளைமேட் கன்ட்ரோல்

வெளியில் நிலவும் சீதோஷ்ணத்திற்கு தகுந்தாற்போல் மோட்டார் இல்லத்தின் வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் உதவியுடன் இந்த மோட்டார் இல்லம் தானியங்கி முறையில் தேவைப்படும்போது குளிர்ச்சி அல்லது வெப்பப்படுத்தும் வசதிகளை கொண்டிருக்கிறது.



எண்ணம்போல் வசதிகள்

இந்த மோட்டார் இல்லத்தை அஷ்டன் மற்றும் டெமி மூர் ஆகியோரின் விரும்பிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.




கண்காணிப்பு கேமரா

இந்த ஆடம்பர மோட்டார் இல்லத்தை சுற்றி 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும் வசதி கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அழைப்பு மணியை விருந்தினர் அல்லது வெளியாட்கள் அடிக்கும்போது, வெளியில் நிற்கும் நபரின் உருவம் மோட்டார் இல்லத்தில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி திரைகளில் தெரியும்.




விலை 

இந்த மோட்டார் இல்லத்தின் விலை ரூ.12 கோடியை நெருங்குகிறது. அதாவது, ஒரு சீரியலில் 26 எபிசோட்கள் நடித்தால் அஷ்டன் கட்சருக்கு கிடைக்கும் சம்பளத்தின் மதிப்புதானாம் இது.




டிசைனர்

ஆன்டர்சன் மொபைல் எஸ்டேட் நிறுவனத்தின் ரான் ஆன்டர்சன்தான் இந்த மோட்டார் இல்லத்தை கட்டிக் கொடுத்துள்ளார். வின் டீசல், ஷரோன் ஸ்டோன், மரியா கரே உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுக்கும் இவர்தான் ஆடம்பர மோட்டார் இல்லங்களை கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா