Wednesday, 12 February 2014

மனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்..!



இப்போது நடைமுறையில் உள்ள இம்ப்ளான்ட் ஆர் எஃப் ஐடி அல்லது மைக்ரோசிப் உயர் ஜாதி நாய்கள் / பூனைகள் / விலை உயர்ந்த மீன்களுக்கு மட்டுமே உபயோகிக்க படுகிறது. இதன் மூலம் எந்த வகை என்று பிறந்தது என்று எல்லா டீட்டெயில்ஸும் கிடைக்கும். சில வகை அரோவன மீன்களை கூட வாங்க விற்க இந்த சிப்கள் தான் உதவுகின்றன. சில திருடர்கள் வீட்டில் தங்கம் வைரம் திருடுவதை விட விலை உயர்ந்த மீன்கள் தான் அவர்கள் டார்கெட். அப்படி திருடினால் கூட அவர்களால் விற்க முடியாது ஏன் என்றால் உள்ளே இருக்கும் மைக்ரோசிப் அந்த மீனின் மொத்த ஜாதகத்தையும் காட்டி கொடுத்துவிடும்.

இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாய் ஆய்வில் இருந்த ஆர் எஃப் ஐடி எனப்படும் மனித உடலில் இம்ப்ளான்ட் செய்யப்படும் ஹியூமன் சிப் போன வாரம் 50 டாலருக்கு இஞ்செக்ட் செய்திருக்கிறார்கள் நிறைய பேருக்கு. இதன் மூலம் நம் உடம்பின் அத்தனை மருத்துவ ஹிஸ்ட்டரியும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு விபத்தில் மாட்டி கொண்டு நீங்கள் சுய நினைவு இல்லை என்றாலும் அந்த கோல்டன் ஹவர்ஸை வேஸ்ட் செய்யாமல் இந்த சிப்பின் மூலம் உங்கள் ரத்த வகை / எந்த எந்த அலர்ஜி / கடைசியில் எங்கு வைத்தியம் செய்து கொண்டீர்கள் / உங்கள் நெருங்கிய உறவினர் பெயர் / கான்டெக்ட் நம்பர் எல்லாம் இருக்கும் இதன் மூலம் கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவர்கள் உங்களுக்கு வைத்தியம் செய்ய முடியும்.

அது மட்டுமல்ல வண்டியை ஸ்டார்ட் செய்ய சாவி வேண்டாம் / வீட்டை திறக்க கூட இந்த டெக்னாலஜி பயன்படுத்தலாம் மற்றூம் இது இருந்தால் உங்கள் பர்ஸ் கூட தேவை இல்லையென்றால் பார்த்து கொள்ளுங்கள் அத்தனை அட்வான்ஸ். படங்களில் பார்த்திருப்பீர்கள் ஜேம்ஸ்பான்டு முதல் நம்மூர் ஹீரோக்கள் வரை உடம்பில் செலுத்திய இந்த கற்பனை விஷயம் இப்போது உண்மையாக...எவ்வள்வு பேர் ரெடி இதை உடம்பில் ஏற்றி கொள்ள ?

அடுத்த ட்ரான்ஸ்ஹியுமன் சன்பிரான்ஸிஸ்கோ கூட்டத்தில் இதை ஏற்ற வெறும் 50 டாலர் தான். இதை இரண்டு கையிலும் ஏற்றீய அமல் கிராஃப்ஸ்ட்ராவின் புகைப்படமும் – எக்ஸ்ரே படமும் பாரீர்.!

No comments:

Post a Comment

 
நண்பேன்டா