Wednesday, 12 February 2014
‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’...!
* ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.
* ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம்.
* ‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.
* ‘‘பங்காளி, வாடா சரக்கடிப்போம்’’னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா, அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.
* ‘‘மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்’’னு நண்பன் நம்ம போன வாங்குனா, நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.
* ‘‘பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.
* ‘‘மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு’’ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா, இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம்.
* ‘‘பரவாயில்ல மச்சான்... நான் வெளியவே நிக்கிறேன். நீ சொல்லிட்டு வா’’ன்னு நம்ம வீட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு நண்பன் சொன்னா, நம்ம வீட்டுல அவனுக்கு பூசை நடந்திருக்குன்னு அர்த்தம்.
* ‘‘அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு’’ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா, அந்தப் பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம்.
* ‘‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா, அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம்.
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment