இந்திய வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய விரிவாக்கப் பணிகளுக்கு காரணமாக அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் 20,00,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தனியார் மட்டுமில்லாமல் பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிவோரில் பெரும்பாலான ஊழியர்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். அத்துடன் முன்னணி வங்கிகள் பலவும் கிராமபுரங்களுக்கும் தங்களது சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வங்கி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டில் மட்டும் வங்கிப்பணிகளுக்காக 4,00,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 70,000 பேர் பொதுத்துறை வங்கிகளால் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் 40,000 பேர் தனியார் வங்கியில் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment