Wednesday, 12 February 2014

மைக்ரோசாப்ட் அளித்த புகார் மீது நடவடிக்கை..!



கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காப்புரிமை அனுமதியின்றி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாடிக்கையாளர்களின் லேப்டாப்களில் சட்டவிரோதமாக மென்பொருட்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களை விற்கும் விற்பனையாளர்கள் சிலர் தனது வாடிக்கையாளர்களுக்கு போலியான மென்பொருட்களை பதிவேற்றம் செய்து அதனை மைக்ரோசாப்டின் அசல் மென்பொருள் என்று கூறி விற்பனை செய்துள்ளனர்.

கடந்த 2013 டிசம்பரில், மைக்ரோசாப்டின் பிரதிநிதி ஒருவருக்கு தனது வாடிக்கையாளர் அளித்த புகாரையடுத்து இந்த விவகாரம் தெரியவந்தது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புகழ் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு, பணரீதியான இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்தவித அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், மோசடி செய்த போலி விற்பனையாளர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டப் பிரிவு 65 மற்றும் 63 ன்படி வழக்கு பதிவு செய்யக் கோரி டெல்லி நீதிமன்றத்தை அணுகியது.

இதனை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு வீணா ராணி, இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் அளித்துள்ள புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து போலி விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா