Saturday, 8 February 2014
மெமரி கார்டின் தொழில்நுட்பத்தகவல்கள்..!
மெமரி கார்டின் ஸ்பீடை கண்டுபிடிப்பது / லாக் செய்யவும் மற்றும் அழித்த டேட்டாவை மீட்டு எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோமா?.
1. மெமரி கார்ட் வைத்திருக்காதவர்களே இப்போது இல்லை என்ற காலத்தில் நிறைய குழப்பங்கள் வருகின்றது. நாலு ஜிபி 150 ரூவாய்க்கு வாங்கினேன் மச்சி ஆனா நீங்க மட்டும் ஏன் 250 அதே 4 ஜிபியை வாங்கினீங்கன்னு கேட்டா பல பேரிடம் அது வந்து…வந்துனு தான் பதில் இருக்கும். இது ஏன் தெரியுமா. ஒவ்வொரு கார்டிலும் நாம் பார்ப்பது இரண்டே தான்.
முதல் விலை இரண்டாவது என்ன பிராண்டு என்று. இதை தவிர நீங்கள் முக்கியமாய் பார்க்க வேண்டிய்து கிளாஸ் எனப்படும் மூன்றாவது முக்கிய விஷயம் 1 – முதல் 10 வரை இருக்கும் இன்னொரு விஷயம். இது என்ன? 4 ஜிபி வாங்கினாலும் அதில் 2 கிளாஸ் என்று குறிப்பிட்டிருந்தால் அது 2 மெகாபிட்ஸ் ஸ்பீட்ல தான் டேட்டாவை டிரான்ஸ்ஃபர் செய்யும். அதே சமயம் 4 ஜிபியில் 10 கிளாஸாக இருந்தால் முன்பு சொன்ன 4 ஜிபியை விட 2 1/2 மடங்கு வேகம் அதிகம். அதனால் நல்ல அதிக கிளாஸை பார்த்து வாங்கவும்.
2. டேட்டாவை மெமரி கார்ட்டில் அழித்துவிட்டால் அதை திரும்ப பெறுவது எப்படி. அதை கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுத்தால் அவன் கொஞ்சம் உங்க டேட்டாவை எடுத்து கொள்வான் அல்லது பரப்பிவிடுவான். அதனால் பாதி பேருக்கு அழித்த விஷயங்களை எடுக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தினால் அழித்த டேட்டாவை எடுக்கலாம். லின்க் – http://www.pandorarecovery.com/ இது ஹார்டு டிஸ்க்குக்கூட பொருந்தும்.
3. எல்லா மெமரி கார்டிலும் லாக் ஸ்விட்ச் இருப்பதால் சேஃப்டிக்கு அதை யூஸ் பண்ணுங்க இதனால் முதல்லேயே டேட்டா அழிவதை தடுக்க இயலும் – இது தெரியாத மக்களுக்கு ( சைடில் இருக்கும்).
Labels:
அனுபவம்,
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment