Saturday, 8 February 2014

குழந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு ‘எடி’ டேப்லெட் – விலை ரூ.9,999..!



மெடிஸ் லெர்னிங் நிறுவனம் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படை லெர்னிங் டேப்லெட்டான ‘எடி’ டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 என்று விலையிடப்பட்ட டேப்லெட் 2 முதல் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு இலக்காக உள்ளது. நிறுவனத்தின் படி, ‘எடி’ எடுகேட்டர் செலக்டர் லெர்னிங் கன்டன்ட் (educator selected learning content), கிட் சேஃப் என்வைரான்மென்ட் (kid safe environment) மற்றும் ஹய் குவாலிட்டி ஹார்ட்வேர் (high quality hardware) உடன் வருகின்றது.

மேலும், இது நம்பகமான வலைத்தளங்களின் அணுகலை மட்டும் அனுமதிக்கின்ற கிட் சேஃப் ப்ரவுசர் கொண்டுள்ளது. பெற்றோர்கள் டேப்லெட்டில் தங்கள் குழந்தைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றிய விவரமான அறிக்கைகளும் கிடைக்கும். பெற்றோர்களின் தேவை படி ஒவ்வொரு குழந்தைகளின் தொடர்புடைய கன்டன்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மூன்று குழந்தைகள் வரை அவர்களின் விவரக்குறிப்புகளை எடி டேப்லெட்டில் உருவாக்க முடியும். எடி டேப்லெட்டில் 150 க்கும் மேற்பட்ட கல்வி விளையாட்டுகள் உடன் வருகிறது மற்றும் பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இது மொழி, கணிதம், மற்றும் படைப்புத்திறன் உட்பட முக்கிய லெர்னிங் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. எடி விளையாட்டுகள் மூலம் குழந்தைகள், புத்தகங்களை படிக்க, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளவது, கணிதம் பயிற்சி போன்றவவை உள்ளது. டேப்லெட்டில் விளையாட்டுகள் மிகவும் ஈடுபடுதல் மற்றும் வன்முறை இல்லாததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெற்றோர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 50,000 க்கும் மேற்பட்ட கல்வி அப்ளிக்கேஷன்களை அணுக முடியும்.

எடி டேப்லெட் அம்சங்கள், 7 இன்ச் (1024×600) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. அதன் 3200 mAh பேட்டரி திறன் 4 மணி நேரத்திற்க்கும் அதிகமாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 1.6GHz டூயல் கோர் பிராசசர், ரேம் 1GB, மற்றும் மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள் நினைவகம் உள்ளது. மேலும், டேப்லெட்டில் HDMI போர்ட் உள்ளது. எடி டேப்லெட் eddytablet.com மற்றும் amazon.in வளைதளத்தில் கிடைக்கின்றது.

எடி டேப்லெட் விவரக் குறிப்புகள்:


  • 7 இன்ச் (1024×600) ஐபிஎஸ் டிஸ்ப்ளே,


  • 1.6GHz டூயல் கோர் பிராசசர்,

  • 0.3 மெகாபிக்சல் முன் கேமரா,

  • 2 மெகாபிக்சல் பின்புற கேமரா,


  • மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள் நினைவகம்,


  • ரேம் 1GB,


  • HDMI போர்ட்,


  • ஆண்ட்ராய்டு 4.2,


  • 3200 mAh பேட்டரி.


No comments:

Post a Comment

 
நண்பேன்டா