Saturday, 8 February 2014
விரைவில் காகிதம் போல் சுருளும் செல்போன்கள், T.V -க்கள்..?
அதிக வளைவு தன்மை உடைய மின் கடத்திகளை, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதன் மூலம், ´காகிதம் போல் சுருளும், மடங்கும் தன்மை உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளை வடிவமைக்க முடியும்´ என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வாளர்கள், மின் கடத்திகள் மற்றும் அதற்கு தேவையான எலக்ட்ரோடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வின் ஒரு பகுதியாக, தங்க நூலிழைகளைக் கொண்டு, அதிநவீன, அதிக வளைவு திறன் கொண்ட மின்கடத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தங்க தனிமங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிக செயல்திறன் கொண்ட எலக்ட்ரோடுகளை உடைய இந்த மின் கடத்திகள், அதிக வளைவு தன்மை கொண்டதாகவும், உயர் மின்கடத்திகளாகவும் செயல்படக்கூடியது.
இதன் மூலம், எதிர்காலத்தில், அதிக வளைவு தன்மை கொண்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்க முடியும். இதை பயன்படுத்தி, காகிதம் போல் சுருளும் தன்மையும், எப்படியும் மடங்கக்கூடிய வகையிலுமான உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளைத் தயாரிக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளை, சுருட்டி, பாக்கெட்டுகளில் கொண்டு செல்லும் நிலை விரைவில் ஏற்படும் என, பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Labels:
அனுபவம்,
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
Thanks for share there information
ReplyDeleteMaybe you like to download free ringtone for mobile
Click here to download:
https://nhacchuonghay.info/nhac-iphone/,
https://nhacchuonghay.info/nhac-khong-loi/,