Friday, 14 February 2014

பெண்களே...! காதலர் தினத்தன்று உங்கள் காதலனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்…?



பொதுவாகவே ஆண்கள் ஷாப்பிங் செய்வது சற்று விசித்திரமாகவே இருக்கும். அதனால் அவர்களுக்கு பரிசுகள் தேர்ந்தெடுப்பதும் கடினமாக இருக்கும்; முக்கியமாக காதலர் தினத்திற்கு வாங்கும் பரிசுகள். ஒரு வேளை, நீங்கள் காதலித்து கொண்டிருந்தால், உங்கள் காதலனுக்கு கண்டிப்பாக ஒரு சிறந்த பரிசை அளிக்க வேண்டுமல்லவா?

அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் நீங்கள் அவரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என்பதையும் அவருக்கு எடுத்துக் காட்டுவது மிகவும் முக்கியம். அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பரிசுகளை தேர்ந்தெடுத்து, பூங்கொத்து மற்றும் இனிப்புகளுடன், இந்த பிப்ரவரி 14-ஐ அவருக்கு மறக்க முடியாத தினமாக மாற்றுங்கள்.
சுவாரஸ்யமான வேறு: பாரம்பரிய காதலர் தின பரிசுப் பொருட்களுக்கான அர்த்தங்கள்!!!

நீங்கள் அவருக்காக எந்த பரிசுகளை தேர்ந்தெடுத்தாலும் சரி, அது அவரை பாராட்டி மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டும். அவருடைய பொழுது போக்குகள் மற்றும் நடவடிக்கைகளை நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், அது சம்பந்தப்பட்ட பரிசுகளை தேர்ந்தெடுங்கள். அவர் எதிர்பார்க்கும் பரிசுகளை வாங்கினால், அது அவர் யூகிக்கும் வகையில் அமைந்து விடும். அதனால் எதிர்பார்க்காத பரிசுகளை அளித்து, காதலர் தினத்தில் அவருக்கு ஆச்சரியங்களை அளித்திடுங்கள்.

*உங்களுக்கு பிடித்த டியோடரண்ட்


நீங்கள் அவருடன் இருப்பதால், அவருக்கு ஏற்கனவே பிடித்த வகை டியோடரண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த காதலர் தினத்தன்று அவரை மணக்கச் செய்திடுங்கள்.


*டெடி பியர் ஜோடிகள்


உங்கள் காதலனுக்கு கொடுக்க இது ஒரு சிறந்த காதல் பரிசாக திகழும். உங்களுக்கு பிடித்த டெடி பியர்களை வாங்கி, அதனை உங்கள் வீட்டு காதல் நாற்காலியில் உங்களுக்கு பிடித்த தோரணையில் வைத்திடுங்கள். அதற்கு மேலும் அழகு சேர்த்திட, உங்கள் பெயரையும் உங்கள் காதலன் பெயரையும் அதில் எழுதிடலாம் அல்லது காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வை அவரிடம் வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை அதில் எழுதலாம்.


*இரண்டு பேரும் செல்வதற்கான எதிர்பாரா டின்னர்


உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அர்த்தத்தை அளித்திடும் வேகமான மற்றும் எளிமையான பரிசு தான் எதிர்பாரா டின்னர். நீங்கள் இருவரும் முதல் முறை டேட்டிங் சென்றதை போல், மீண்டும் ஒரு முறை, காதல் உணர்வுமிக்க சூழ்நிலையில், அதே உணவுகளுடனான டின்னருக்கு சென்றால், அவர் மீது உங்களுக்கு இன்னமும் அதே அளவு காதல் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வார். அவருக்கு பிடித்த வண்ணம் ஆடைகள் அணிவித்துக் கொள்ளுங்கள். உணவகத்திற்கு செல்லும் போது, காதல் கார்ட்


*கைக்கடிகாரம்


உங்கள் காதலனுக்கு காதலர் தினத்தன்று அளிக்க வேண்டியான சரியான பரிசு தான் கைக்கடிகாரம். காதலை வெளிப்படுத்தும் நகை வகையை சார்ந்த பரிசாக இது பார்க்கப்படும்.


*பீர்


மற்றும் நொறுக்குத்தீனி கூடை உங்கள் ஆண் மகனுக்கு நீங்கள் காதலர் தினத்தன்று அளித்திட மற்றொரு சிறந்த பரிசு இது. சுவை மிக்க பீர்கள் மற்றும் மனதை நிறைக்கும் நொறுக்குத்தீனிகளை கொண்டுள்ள பரிசு கூடையாக இது விளங்கும். அதற்கு கூடுதல் அழகை சேர்ப்பது உங்களின் விருப்பம். இந்த பிப்ரவரி 14-ஐ உங்கள் காதலனுக்கு சுவை மிகுந்ததாக மாற்றுங்கள்.


*ரொமான்டிக் கப்


ரொமான்டிக் கப்பை பரிசாக கொடுத்தல், தினமும் காலை அதில் காபி குடிக்கையில் உங்கள் ஞாபாகம் வரும்; நீங்கள் இருவரும் ஒன்றாக செலவிட்ட நேரங்கள் ஞாபாகத்திற்கு வரும். இவ்வகை கப் கவர்ச்சியுடன் விளங்கும். உங்களுக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்யலாம்; உதாரணத்திற்கு மணல் டிசைனில் இதயங்கள், கற்கள் அடங்கிய டிசைனில் இதயங்கள் அல்லது இதழ்கள் டிசைனில் இதயம் அல்லது உங்கள் காதலருக்கு பிடித்த டிசைன்.


*காதலர் தின சிறப்பு பரிசு – கட்டிப்பிடித்து முத்தங்கள்


இந்த அருமையான பரிசு, காதலர் தினத்திற்காக உங்கள் மனம் விரும்பிய காதலனுக்கு கொடுக்க வேண்டிய விசேஷமான பரிசு. அவரை வெட்கப்பட வைக்கும் சுவைமிக்க கலவையான பரிசு இது. இந்த பரிசு கண்டிப்பாக அவரை “ஆஹா” என்று சொல்ல வைக்கும்.


*லெதர் பர்ஸ்


ஈர்க்கும் வகையில் பர்ஸ் வைத்திருப்பது ஒவ்வொரு ஆணுடைய பெர்ஸ்னாலிடியின் அதி முக்கிய பங்கை வகிக்கும். அதனால் காதலர் தினத்தன்று தூய்மையான லெதர் பர்ஸை அவருக்கு வழங்கினால், அதனை கொண்டு அவர் ஸ்டைலாக நடை போடுவார். நீங்கள் வாங்கும் பர்ஸ் எளிமையாக இருக்க வேண்டும். மேலும் அவரின் பாக்கெட்டில் சுலபமாக சென்று வருமாறு சிக்கென இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா