Friday, 14 February 2014
பற்களில் உள்ள காரையை ஒரே நிமிடத்தில் போக்க எளியவழி...
அடிக்கடி தொலைக்காட்சிகளில் பற்களில் காரை படிந்துள்ளதா….? உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்க என கவர்ச்சி விளம்பரங்களால், நாமும் இருக்கும் அனைத்து டூத் பேஸ்ட் மற்றும் பிரஸ் வாங்கி உபயோகித்தும் ஒரு பலனும் கிடைக்காது. பல்லுதான் தேய்ந்துபோகும்.
பற்காரையை நீக்க உங்களுக்கு பக்கவிளைவுகள் இன்றி ஒரு எளிய வழி.
நீண்ட நாட்களாக பற்களில் படிந்துள்ள காரையை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும் (துவர்ப்புத் தன்மை கொண்டது).
அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது, கரு ஊதா நிறமாக மாறி துவர்ப்புத் தன்மையை அதிகரித்து விடும். கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்ய வேண்டும். பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
குறிப்பு:- இந்த முறையை அடிக்கடி செய்வது நல்லதல்ல, வருடத்திற்கொரு முறை செய்து கொள்வது நல்லது
Labels:
உடல்நலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment