145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு!
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் உருவாக்கிய இந்த தருமச்சாலையில் 145 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து மக்களின் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது அணையா அடுப்பு.
ஆறறிவுடைய மனித இனம், தன் இனம் பசியால் தவிப்பதை கண்ணெதிரே காணுகிறப "அது அவரவர் தலையெழுத்து, வினைப்பயன்' என்று வேதாந்தம் பேசியது. இப்படி பேசுவோர் மத்தியில் "வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'என்று பாடிய வள்ளலார் பசிக்கொடுமையை ஒழிக்க முன்வந்தார்.
எல்லா ஜீவன்களிடமும் இறைவன் பொதுவாக விளங்குகிறார் என்பதை உணர்ந்து பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம். தான் கூறிய ஜீவகாருண்ய தத்துவப்படி, வள்ளலார் 1867, மே 23ல் சத்தியதருமச்சாலையை உருவாக்கினார்.
இங்கு ஜாதி, மதம், இனம், மொழி, தேசம், நிற பேதமின்றி அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் ழங்கப்பட்டு, ஏராளமானோரின் பசி போக்கப்படுகிறது.
Friday, 14 February 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment