Friday, 14 February 2014
புற்றுநோய் சிகிச்சைக்கு துளசி எண்ணெய்...!
இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.
இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் குறித்து வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக உதவி பேராசிரியர் சந்திகாந்த் மாணி,” மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அந்த எண்ணெய்யை புற்நோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவினோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது.
எங்களின் இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளோம். கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற செடிகளை நேரடியாக மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், நோய் தீர்க்கும் சத்து பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
Labels:
உடல்நலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment