Monday, 17 February 2014

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம்..!

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம் ஜெர்மனி தோட்டக்காரர் சாதனை


ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார்.

அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன.

இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் தோட்டக்காரனாக பணி புரிந்தேன். அந்த நர்சரி பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும்.

அதில் ஒரு வரிசையில் சுமார் 90 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும். அப்போதிருந்தே நான் ஆப்பிள் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு என்னிடம் இல்லை. எனவே எனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரத்தையே பல்வேறு ரகங்களை கொண்ட ஆப்பிளை காய்க்கும் மரமாக வளர்க்க திட்டமிட்டேன்.

கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு ரக ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து எனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருகிறேன். தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள எனது ஒரே ஆப்பிள் மரத்தில் சமையலுக்கு பயன்படும் அமெரிக்க ஆப்பிள் முதல் 1883ம் ஆண்டு ரகத்தைச் சேர்ந்த வித்திங்டன் பில்பாஸ்கெட், 1908ம் ஆண்டைச் சேர்ந்த எட்டீஸ் மேக்னம் போன்ற பல்வேறு ரகங்களும் எனது மரத்தில் காய்த்து குலுங்குகின்றன என்கிறார் பெருமையுடன்.

இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா