மக்களவையில் இன்று மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கலானது. இந்நிலையில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால், அவையின் மையப்பகுதிக்குச் சென்று தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, மைக்கை பிடுங்கி, அருகில் உள்ள மேஜையில் இருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டு உடைத்தார்.
அத்துடன் திடீரென தன் கையிலிருந்த மிளகுப்பொடி ஸ்பிரேவை அவையில் உள்ள உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதிலிருந்து தப்பிக்க உறுப்பினர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் அவையில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கினார்.இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மிளகு பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.உடனே பாராளுமன்ற மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எம்.பி.க்களுக்கு சிகிச்சை அளித்தனர். 3 எம்.பி.க்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிக்கின்றன.இன்று இது போன்ற களேபரத்தில் ஈடுபட்ட எம்.பி. ராஜ்கோபால் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டு மக்கள் மன்றத்தை போர்க்களமாக மாற்றிய உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.மேலும் மாமன்றத்துக்குள் எரிவாயு, கத்தி உள்ளிட்ட ஆயுங்கள் இருந்தது இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பெரும் கரும்புள்ளியாக கருதுகிறேன் .என்றும்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment