Thursday, 13 February 2014
வீட்டில் காயப்போட்ட துணிகளை காணவில்லை: ஆன்லைனில் புகார்: விசாரிக்க எஸ்.பி., உத்தரவு
பழநியை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டு கொடியில் காயப்போட்ட துணியை காணவில்லை என, திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு ஆன் லைனில் புகார் அளித்துள்ளார். இதை விசாரிக்க, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
பழநியை சேர்ந்தவர் அபி,40. இவர், ஆன்லைனில் திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியுள்ளதாவது: நான் பழநி ஆர்.எப்., ரோட்டில் வசிக்கிறேன். 3 தினங்களுக்கு முன்பு எனது வீட்டின் முன்புறம் உள்ள கொடியில் துணிகளை காயப்போட்டிருந்தேன்.
மாலையில் பார்த்தபோது, துணிகளை காணவில்லை. இதை யாரோ திருடிசென்றுவிட்டனர். அவற்றை போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். ஆன்லைன் மூலம் வரும் புகார்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, ஏற்கனவே போலீசாருக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளதால், காணாமல் போன துணிகள் குறித்து வந்த புகாரை பழநி போலீசார் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, போலீசாருக்கு, எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பழநி போலீசார் வழக்குபதிந்து துணிகளை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment