Friday, 21 February 2014

குளியலறையை காதல் வயப்படுத்தும் படி அமைக்க சில டிப்ஸ்...!




உங்கள் துணைவருடன் ஒரு காதல் வயப்படுத்தும் குளியலறையில் இருப்பது தான் மிகுந்த நெருக்கமான மற்றும் உணர்ச்சிகரமான நேரமாக அமைகிறது. குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் இத்தகைய அழகான குளியலை நாம் அனுபவிக்க சரியான இடம் தேவைப்படுகிறது. உங்கள் காதலர் அல்லது துணைவருடன் உல்லாசமாக இருப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகளை நமது வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ செய்ய முடியும். எந்த அளவிற்கு நமது துணைவருக்கு வசதியாக உள்ளதோ அந்த வகையையே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஏற்பாடுகள் மிகுந்த உணர்வுபூர்வமாகவும் மற்றும் நெருக்கத்தை கொண்டு வரும் வகையிலும் இருக்க வேண்டும்.

பொதுவாக குளியலறையை அலங்கரிக்க நமக்கு தேவையான பொருட்களாக இருப்பவை சிவப்பு ரோஜாக்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஆகியனவாகும். அலங்கரிக்கும் பொருட்களை பயன்படுத்தி குளியலறையை காதல் மயமாக மாற்ற முடியும். இந்த முழு அமைப்பும் நமக்கு அழகூட்டுபவதாகவும், வசதியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் அங்கு செலவு செய்யும் நேரம் அழகாகவும், சிறந்தாகவும் நமது கனவு குளியலறையாகவும் மாற்றி அமைக்க வேண்டியதும் நல்லதாகும். இங்கு குளிப்பது ஓய்வளிப்பதாகவம் மற்றும் அழகானதாகவும் இருக்க வேண்டும்.

மிகுந்த கவர்ச்சியூட்டும் யோசனைகளை கொண்டு உங்கள் அன்புக்குரியவரின் மடியில் சூடான நீர் கொண்ட தொட்டியில் நேரம் கழிக்கும் வண்ணம் குளியலறையை மாற்றும் யோசனைகள் இதோ!

சிவப்பு காதல் ரோஜா

 சிவப்பு நிறமும், ரோஜா மலரும் காதலை வெளிப்படுத்துவதில் ஒன்றுக்கு ஒன்று இணையான விஷயங்களாக உள்ளன. காதலை தூண்டும் வகையில் சிவப்பு நிற மெழுகுவர்த்திக்கள் நாம் அங்கே ஏற்றி வைக்கலாம். குளியலறையின் வாசலில் ரோஜா இதழ்களை கொண்டு இதயம் போன்ற வடிவத்தை அமைக்கலாம். அறையின் நடுப்பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கலாம். குளியல் தொட்டி இருந்தால் இதில் ரோஜாவின் சாற்றை கலந்து சிவப்பு மற்றும் வெள்ளை நிற இதழ்களை பரப்பி விட்டு சிறந்த குளியலுக்கு ஏற்பாடு செய்யலாம். இந்த வகையில் நாம் காதல் வயப்படுத்தும் படி நமது குளியலறையை தயார் செய்ய முடியும்.

லாவெண்டரின் சிறப்பு 

பாலுணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ள லாவெண்டர் நமது உணர்ச்சியை தூண்டி காதல் வயப்பட வைக்கிறது. காதலை வெளிப்படுத்த மற்றும் அமைதியான சூழலை கொண்டு வர லாவெண்டர் சாற்றைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். வாசனை தரும் மெழுகுவர்த்திகள் மற்றும் பல வடிவங்கள் கொண்ட மெழுகுவர்த்திகளையோ அல்லது மஞ்சள் நிறத்தில் மெல்லியதாக ஒளிரும் விளக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். பூச்செண்டுகளைக் கொண்டு கண்ணாடி மற்றும் ஜன்னல் அருகிலும் வைத்து அலங்கரித்தால் அது சிறப்பூட்டும் வகையில் அமையும். லாவண்டர் சாற்றை நாம் குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும் அதிகமாக பயன்படுத்தும் போது, நாம் எதிர்ப்பார்த்த சூழலை பெற முடியாமல் போகலாம்.

வீட்டின் பின்புறம்

 திறந்த வெளியில் ஒரு வேளை யாரும் இல்லாத இடமாக இருந்தால் நிச்சயம் அந்த இடத்தை இதற்காக பயன்படுத்தலாம். ஒரு குளியல் தொட்டியை தயார் செய்து திறந்த வெளியில் வைத்து அலங்கரிக்கலாம். மாலை அலலது இரவு வேளைகள் தான் இதற்கு சரியான நேரம். பூக்களாலும், விளக்குகளாலும் அந்த இடத்தை அலங்கரிக்கலாம். அந்த இடத்தை சுற்றி மெல்லிய துணியாலான வலையை கொண்டு ஒரு கூடாரம் போல் அமைத்து அதற்குள் குளியல் தொட்டியை வைக்கலாம். தொட்டிக்கு அருகே ஒரு மேசை அமைத்து நாம் குடிப்பதற்கு தேவையான மதுபானம் மற்றும் இரண்டு கண்ணாடி டம்ளர், பூச்செண்டு ஆகியவற்றை வைக்கும் போது அலங்காரம் முழுமையடைகிறது.

 நீச்சல் குளம்

 வீட்டிற்குள் ஒரு நீச்சல் குளம் இருந்தால் நீங்கள் நிச்சயம் பாக்கியசாலி தான். உங்கள் காதலை வெளிப்படுத்த இது சிறந்த இடமாக மாற்ற முடியும். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் வண்ணம் நிறைந்த வளவளப்பான துணியை கொண்டு அலங்கரிப்பதும் மற்றும் இதய வடிவம் கொண்ட பலூன்கள், மதுபானங்கள், மங்கலான விளக்குகள் ஆகியவை கொண்டும் அலங்கரிக்கலாம். இதனுடன் சேர்த்து மெல்லிய இசையையும் நாம் அமைத்தால் அது செவிக்கும் அழகூட்டும் வண்ணம் அமைகின்றது. பல ஜோடிகளும் எதிர்பார்க்கக் கூடிய காதல் மிகுந்த குளியலாக இது இருக்கும்.

மெல்லிய இசை

 மிகவும் எளிமையான வகையில் வெறும் மங்கலான ஒரு விளக்கையும், கொஞ்சம் மெல்லிய இசையையும் குளியலறையில் ஏற்படுத்தினால் போதும். அதுவே சிறந்த மற்றும் எளிமையான பாலுணர்வை தூண்டுவதாகவும், காதல் வயப்படுத்துவதாகவும் அமைகின்றது. இந்த அலங்காரத்திற்கு மிகப்பெரிய அலங்காரம் ஒன்றும் தேவை இல்லை. எளிமையான வகையில் அலங்கரித்து குளியல் அறையை காதல் வயப்படுத்தி மகிழ்ந்து என்றும் மறக்கமுடியாத நினைவுகளை செதுக்குங்கள்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா