Friday, 21 February 2014

1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு பற்றி....!



1 முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கலோரி, 1.2 கிராம் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிற பழங்களைக் கொடுக்க வேண்டும். தக்காளி, ஆரஞ்சு தரலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக் கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.

இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா