நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள்.அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது.கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை.ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும்.
நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.
நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.
இதற்காக கம்ப்யூட்டர் அருகில் அமர்ந்து, வேலை செய்வதை நிறுத்துவது உகந்தது அல்ல. எனவே அடுத்த தீர்வாக, கண்களை பராமரிப்பதே சிறந்த வழி. இங்கு சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கம்ப்யூட்டர் வேலையால்,கண்களில் பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரைன் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
நீண்ட நேரம் கண் இமைக்காமல், கம்ப்யூட்டர் திரையை பார்த்துக் கொண்டு வேலை செய்வதால் கண்கள் உலர்ந்து விடும். கண்களில் பணிச்சுமையை மற்றும் ஸ்ட்ரைனை தவிர்ப்பதற்கு, சிறிய இடைவேளைகளை எடுத்து கொள்ள வேண்டும். இது கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களை பாராமரிப்பதற்காக அறிவுறுத்தப்படும் டிப்ஸ் ஆகும்.
உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, சூடு பரப்புங்கள். பின் உங்கள் உள்ளங்கைகளை கண்களில், 60 நொடிகள் ஒற்றி எடுங்கள். இது களைப்படைந்த உங்கள் கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் கண்களுக்கு ஒரு நல்ல அமைதி கிடைக்கும் வரை, இந்த செயலை, இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும் போது,திரையின் தூரத்தை மற்றும் உங்கள் கண்களின் தொடர்பு தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்.இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான செயல் ஆகும். இது கம்ப்யூட்டரில் வேலை செய்வோருக்கான முக்கியமான கண் பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.
இந்த உடற்பயிற்சி, நீண்ட நேரமாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்யும் நபர்களுக்கு கண்களில் நல்ல ஆசுவாசத்தைத் தரும். இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டர் திரையில் இருந்து பார்வையை விளக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை, 20 நொடிகள் உற்று பார்க்க வேண்டும்.
கம்ப்யூட்டர் திரையில், அடர்வு நிறைந்த நிற எழுத்துக்களையும், லைட்டான வண்ண பின்புலங்களையும் தேர்வு செய்து வேலையை தொடங்க வேண்டும். இது நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது பின்பற்ற கூடிய எதார்த்தமான டிப்ஸ் ஆகும்.
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சரியான ஒளி அமைப்புகள் அமைய வேண்டும். நீங்கள் உங்கள் கண்களில் கம்ப்யூடர் வேலையின் பணிச்சுமையை மற்றும் ஸ்ட்ரைனை தவிர்க்க விரும்பினால், அந்த அறையில் ஜன்னல்கள் மற்றும் சீலிங்களில் இருந்து கண்களை கூசும் ஒளியானது, கம்ப்யூட்டரை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, உங்களுக்கு சரியான அளவில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். வெளிச்சத்தைக் கூட்டி வைத்தால் அது கண்களுக்கு, சுமையாக இருக்கும், இது கம்ப்யூட்டரில் நெடுநேரம் வேலை செய்வோருக்கான மற்றொரு கண் பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.
கண்களை நிம்மதியாகவும்,ஆசுவாசமாகவும் வைக்கும் வண்ணம் பச்சை.கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, ஜன்னல் வழியே சிறிது எட்டி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்யும் இடம் நான்கு சுவர்களால் சூழப்பட்டு இருந்தால், எவ்வாறு கம்ப்யூட்டர் ஸ்ட்ரைனை தவிர்ப்பது என நினைக்கிறீர்களா? அதற்கும் ஒரு வழி உண்டு. உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வால்பேப்பரை பச்சை வண்ணத்தில் மாற்றுங்கள்.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, சிறிது நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கணிமைகளை மூடி, கழுத்தினை லேசாக சுற்றுங்கள். இது கண்களை பராமரிப்பதற்கான சிறந்த டிப்ஸ்களில் ஒன்றாகும். மேலும் கழுத்தை சுற்றும் போது, இது உங்கள் கண்ணில் இயற்கையான நீர்ச்சத்து நிலைத்திருக்கச் செய்யும். இதனால் கண்கள் உலர்வது தவிர்க்கப்படும். இதன் மூலம் அதனால் வரும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
இந்த கம்ப்யூட்டர் கண்ணாடிகள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் கண்களில் ஏற்படும் ஸ்ட்ரைனை குறைப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. இது எவ்வாறு கண்களின் ஸ்ட்ரைனை குறைக்கும் என சந்தேகமாக உள்ளதா? இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் ஸ்ட்ரைனை சரிசெய்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் ஆக்குகிறது.
No comments:
Post a Comment