Wednesday, 26 February 2014

சிவகார்த்திகேயன் பாட்டு பாடினாலே படம் ஹிட்டுதான்..!



மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி வெறும் இரண்டே வருடங்களில் கோடிகளில் சம்பளம் பெரும் முன்னணி நடிகராக
உருமாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களுமே மெஹா ஹிட். முக்கியமாக சென்ற ஆண்டு இறுதியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்குச் சவால் விடுமளவு வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியிருந்தார்.

படங்களில் மட்டுமின்றி ஏகத்துக்கும் பரவிக்கிடக்கும் செண்டிமெண்ட்கள் தயாரிப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை. சிவகார்த்திகேயன் பாடியதால்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் ஹிட்டடித்திருப்பதாக தற்பொழுது கோலிவுட்டில் செண்டிமெண்ட்கள் பரவிவருகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படங்களிலும் அவரைப் பாடல் பாடச் சொல்லி கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

தற்பொழுது ஹன்சிகாவுடன் இவர் நடித்துவரும் மான்கராத்தே திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் பாடியிருப்பதாகக் கூறப்படுகிறது. அனிருத்
இசையமைத்திருக்கும் இப்படத்தில் மற்றொரு முக்கியச் செய்தியாக அனிருத் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மான்கராத்தே திரைப்படத்தின் இசை வருகிற மார்ச் 1 ல் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா